புதிய இசட் போல்டு 3 மாடலில் எஸ் பென் வசதியும் அறிமுகம்.

Date:

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 5ஜி ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி இசட் போல்டு 2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

அம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி இசட் போல்டு 3 மாடல் 7.6 இன்ச் QXGA+ இன்பினிட்டி பிளெக்ஸ் டைனமிக் AMOLED 2X ஸ்கிரீன், 6.2 இன்ச் HD+ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, 120HZ ரிபெர்ஷ் ரேட் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கிரீன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இதன் கீழ் 4 எம்பி அன்டர் டிஸ்ப்ளே கேமராவும், வெளிப்புறம் 10 எம்.பி. கேமராவும் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய இசட் போல்டு 3 மாடலில் எஸ் பென் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான எஸ் பென் இருவித ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இவை எஸ் பென் போல்டு எடிஷன் மற்றும் எஸ் பென் ப்ரோ என அழைக்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி அம்சங்கள்

– 7.3 இன்ச் 2208×1768 பிக்சல் QXGA+ 22.5:18 டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்
– 6.2 இன்ச் 2268×832 பிக்சல் 24.5:9 HD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
– 12 ஜிபி LPDDR5 ரேம்
– 256 ஜிபி / 512 ஜிபி (UFS 3.1) மெமரி
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ. 3.1
– டூயல் சிம்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், f/1.8, PDAF, OIS
– 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, PDAF, OIS
– 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
– 10 எம்.பி. முன்புற கேமரா, f/2.2
– 4 எம்பி அன்டர் டிஸ்ப்ளே கேமரா, f/1.8
– ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– வாட்டர் ரெசிஸ்டண்ட் (IPX8)
– 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2 LE
– யு.எஸ்.பி. டைப் சி
– 4400 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 25 வாட் வயர், 10 வாட் வயர்லெஸ் சார்ஜிங், 4.5 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 5ஜி மாடல் பேண்டம் பிளாக், பேண்டம் கிரீன் மற்றும் பேண்டம் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் அச்சுவேலி வைத்தியசாலையில் தூய்மைப் பணி

அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும்...

இலங்கையர்களை குறிவைக்கும் அழகான பெண்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும்...

ஈரான் சிக்கலில் இருந்து விரைவில் வெளியேற ட்ரம்பிற்கு கூட்டுப்படை தலைவர் ஆலோசனை

கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ஈரானுடனான மோதலில் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்