கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை நேஹா மேனன். நாரதன், ஜாக்சன்துரை ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். 19 வயதாகும் நடிகை நேகா, தற்போது சித்தி 2, பாக்யலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நேஹா, அடிக்கடி அதில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அவ்வாறு பதிவிடும்போது ஏராளமானோர் தன்னை உருவ கேலி செய்து கமெண்ட் செய்ததால், தான் மன அழுத்தத்திற்கு ஆளானதாக நேஹா தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக வலைதளத்தில் தன்னை கிண்டல் செய்து கமெண்ட் செய்பவர்களை பிளாக் செய்துவிடுவேன் எனக் கூறியுள்ள நேஹா, இதன் காரணமாக இதுவரை 8 ஆயிரம் பேரை பிளாக் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1