25.6 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இந்தியா

செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திய முயற்சியில் இந்தியா தோல்வி!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஈ.ஓ.எஸ்-03 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை வடிவமைத்தது. 2268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இயற்கை பேரழிவுகளை விரைவாக கண்காணிப்பது, பூமியில் உள்ள பெரிய நிலப்பகுதிகளின் நிகழ்நேர படங்களை பெறுவது, விவசாய பயன்பாடு, வனவியல், கனிமங்கள், நீர்நிலைகள், பனிப்பாறைகள், பேரழிவு எச்சரிக்கை, சூறாவளி, இடியுடன் கூடிய மழை போன்றவற்றை துல்லியமாக கண்காணித்து அறிந்து கொள்ள இந்த செயற்கைகோள் உருவாக்கப்பட்டது.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைகோளை ஜி.எஸ். எல்.வி. எப்-10 ராக்கெட்டில் பொருத்தி விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது. இன்று அதிகாலை 5.43 மணிக்கு செயற்கைகோளை சுமந்தபடி ராக்கெட் விண்ணை நோக்கி பாய்ந்தது.

ஆரஞ்சு வண்ண புகையை கக்கியபடி சீறிப்பாய்ந்த ராக்கெட் விஞ்ஞானிகள் கணித்திருந்த பாதையில் பயணிக்க தொடங்கியது. அப்போது விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ந்தனர். ஆனால் சில நிமிடங்களில் அந்த பாதையில் இருந்து ராக்கெட் விலகியது. இதனால் செயற்கைகோளை சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ஈ.ஓ.எஸ்-03 பூமி கண்காணிப்பு செயற்கைகோளை விண்ணுக்கு செலுத்தும் திட்டம், விண்ணில் நிலைநிறுத்தும் முன்பாக தோல்வியில் முடிந்தது.

இந்தியா இதுவரை 14 ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ளது. இதில் 4 முறை திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. 2006-ம் ஆண்டு ஒரு முறையும், 2010-ம் ஆண்டு 2 முறையும் தோல்வி அடைந்தது. தற்போது 4-வது முறையாக இன்றைய முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

Leave a Comment