26.7 C
Jaffna
December 28, 2024
Pagetamil
சினிமா

கண்டா வரச்சொல்லுங்க மாரியம்மாளின் பரிதாப நிலை!

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் இடம் பெற்ற ‘கண்டா வர சொல்லுங்க’ பாடல் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த பாடலை பாடியவர் மாரியம்மாள். சிவகங்கை மாவட்டம் கிடாக்குழி என்ற கிராமத்தில் பிறந்ததால் இவரது பெயர் கிடாக்குழி மாரியம்மாள் என்று அழைக்கப்படுகிறது.

மாரியம்மாள் பல்வேறு நாட்டுப்புறப் பாடல்களை பாடியிருக்கிறார். வெடிகுண்டு முருகேசன், மாதவனும் மலர்விழியும், மதுரை சம்பவம், களவாணி 2 ஆகிய படங்களில் இதற்கு முன்னர் பாடி இருக்கிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரி கம பா நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமடைந்த லட்சுமி இவருடைய மகள் தான். இத்தனை வருடங்கள் பல பாடல்களை பாடினாலும் கர்ணன் படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்று இருக்கிறார். இதனால் தன்னுடைய 50 வருட கனவு நிறைவேறி விட்டதாக நெகழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் மாரியம்மாள்.

மாரியம்மாள் பல ஆண்டுக்கு முன்னரே கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவருடன் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். மகளின் கணவரும் சில வருடங்களிலேயே காலம் ஆகி இருக்கிறார். ஒற்றையாக இருந்து தனது மகள் பேரன்கள் என்று பலரையும் மாரியம்மாள் தான் காப்பாற்றி வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் கர்ணன் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்த சில மாதங்களிலேயே இவரது பேரனுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது.

சிகிச்சைக்காக சென்னையில் வாடகை வீடு எடுத்து தங்கி அவருக்கு சிகிச்சை பார்த்து வந்திருக்கிறார்கள். கொரோனா பிரச்சினை காரணமாக இவருக்கு கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் அப்படியே கிடப்பில் போய் விட்டது.

பேரனின் சிகிச்சைக்காக கையில் வைத்திருந்த பணத்தையெல்லாம் செலவு செய்து விட்டு சொந்தமாக இருந்த வீட்டையும் விற்று விட்டார்கள். தற்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், நிதி நெருக்கடியால் மூன்று மாதங்கள் வாடகை கூட கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார் மாரியம்மாள். இன்னும் எத்தனை கஷ்டங்களை தான் நான் தாங்குவேன், முடிந்தவர்கள் கஷ்டங்களை முடிந்த உதவிகளை செய்யுங்கள் என் பேரனை எப்படியாவது காப்பாற்றி கொடுங்கய்யா என்று கண்ணீர் மல்க பேசியிருக்கிறார் மாரியம்மாள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25இல் ரிலீஸ்

Pagetamil

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

Leave a Comment