ரியல்மி நிறுவனம் லேப்டாப் சந்தையில் களமிறங்க இருக்கிறது. கடந்த சில நாட்களாக புது லேப்டாப் விவரங்களை ரியல்மி டீசர்களாக வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது ரியல்மி லேப்டாப் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மியின் முதல் லேப்டாப் சீரிஸ் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகமாகிறது. முதற்கட்டமாக ரியல்மி லேப்டாப் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரியல்மி புக் என அழைக்கப்படும் புதிய லேப்டாப் சீனாவில் நடைபெறும் ரியல்மி 828 நிகழ்வில் அறிமுகமாகிறது. லேப்டாப் மட்டுமின்றி ரியல்மி பேட் பெயரில் டேப்லெட் ஒன்றையும் ரியல்மி அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், ஆகஸ்ட் 18 ஆம் தேதியே ரியல்மி பேட் மாடலும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ரியல்மி புக் லேப்டாப் மாடல் மெட்டாலிக் சேசிஸ், மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. இதில் பேக்லிட் கீபோர்டு, பெரிய அளவில் டச்பேட் உள்ளது. இத்துடன் பிரத்யேக கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இதன் மற்ற அம்சங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன.