யாழில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த இளம் கர்ப்பிணிப் பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியை சேர்ந்த 30 வயதான 3 மாத கர்ப்பிணி பெண்ணே இவ்வாறு உயிரிழ்ர்ள்ளார்.
இவர் கடந்த 8ஆம் திகதி மாலை திடீரென வாந்தி எடுத்துள்ளார். பின்னர் சுகமாகி விட்டார்.
நேற்று முன்தினம் காலை உடல்நிலை மோசமடைந்து, மயக்கமாகி விழுந்துள்ளார். அவரை உடனடியாக யாழ் போதனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் ஏற்கனவே உயரிழந்தது தெரிய வந்தது.
அவரது உடலின் மீது நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியது.
யாழ்போதனா வைத்தியசாலையில் நேற்று 4 கொரோனா மரணங்கள பதிவாகியது குறிப்பிடத்தக்கது.