பொதுமக்களால் உருவாக்கப்பட்ட மணல்காடு சவுக்கம் காட்டையும் உரிமை கோரும் வனவளத் திணைக்களம்!

Date:

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் மக்களாலும் பொது அமைப்புக்களாலும் நட்டு வளர்க்கப்பட்ட சவுக்கமர காட்டினை இன்று (11) வனவளத் திணைக்களம் தமது ஆளுகைக்குட்படுத்தி அங்கு எல்லைக் கற்களிட முயற்சிச்த வேளை, மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இரண்டு வனவள திணைக்கள அதிகாரிகளும் அவர்களுக்கு பாதுகாப்புக்காக விசேட அதிரடி படையினரும் மணல்காடு சவுக்கு மர காட்டுப் பகுதிக்கு வந்தவேளையில் மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

சவுக்கு காடு தம்மால் நாட்டி வளர்க்கப்பட்டது என்றும், இதனை வனவள திணைக்களத்திற்க்கு தர முடியாது என்றும் மக்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தற்காலிகமாக வனவளம் திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இந்த சவுக்கு காடு 1963,1980 மற்றும் 1993 காலப்பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணம், மற்றும் மக்கள் அமைப்புக்கள், விடுதலைப்புலிகளால் வளர்க்கப்பட்டது.

அங்கு பொழுது போக்கு மையம் 2016 ஆண்டு அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு ஏழு ஏக்கர் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

சவுக்கம் காட்டுப் பூங்கா தற்போது மணல்காடு கிராம அபிவிருத்தி சங்கத்தின் பராமரிப்பில் உள்ளதுடன் 2014 ஆண்டு மாவட்ட செயலர் வேதநாயகனால் அனைத்து கிராம அபிவிருத்தி அமைப்புக்கள் முன்னிலையில் சமூக காடாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் அணுசக்தி திட்டம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 20 மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களை வழங்குபவர்களுக்கு 20 மில்லியன் டொலர்...

பராகுவேவின் ஜனாதிபதி பதவி நீக்கம்!

ஒரு டிஜிட்டல் வங்கியின் வீழ்ச்சியால் தூண்டப்பட்ட, வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும்...

சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோர் வெளியேற நீதிமன்றம் உத்தரவு

அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்