28.8 C
Jaffna
March 6, 2025
Pagetamil
ஆன்மிகம்

நபிகள், சித்தர்கள், இயேசு நாதர் போற்றிய அத்தி மரத்தின் சிறப்புகள் இதோ

இயேசு நாதர், நபிகள், சித்தர்கள் போற்றிய அத்தி மரத்தின் சிறப்புகள்.

தற்போது அத்தி வரதரின் சிறப்புகள் அறிந்த அளவிற்கும் அத்தி மரத்தின் சிறப்புகள் அந்தளவிற்கு நம்மில் பலருக்கு தெரியாது. வாருங்கள் அத்தி மரத்தின் சிறப்புகள் மற்றும் பலன்களை பார்ப்போம்…

அத்தி மரம் என்றால் இப்போது அனைவருக்கும் நினைவுக்கு வருவது அத்தி வரதர் தான். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் 2019 ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைப்பெற்ற அத்தி வரதர் வைபவத்தில், ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதன் மூலம் அத்தி மரம் குறித்தும், அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்தி வரதர் சிலை குறித்து பல் வேறு செய்திகள் வெளியாகி அத்தி மரம் குறித்த சிறப்புகள் வெளி வந்தன.

அந்த வகையில் அத்தி மரத்தின் உள்ள தனித்துவம் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து இங்கு பார்போம்.

அத்தி மரத்தின் சிறப்புகள்:

1. சிலை, சுதை, தாரு என மூன்று வகை சுவாமி சிலைகள் செய்யப்படுகின்றன. அப்படி தாரு எனும் மரத்திலான சிலையை செய்ய வேண்டுமெனில் அது அத்தி மரத்தினால் செய்யப்பட வேண்டும் என இந்து ஆகம விதிகள் கூறுகின்றன.

அதன் அடிப்படையில் அத்தி வரதர் சிலை அத்தி மரத்தினால் ஆன மரக்கட்டையில் செய்யப்பட்டிருந்தார்.

2. உலகில் எல்லா பகுதிகளிலும் வளரக்கூடிய ஒரே மரம் எதுவென்றால் அது அத்தி மரம் மட்டுமே.

3. சில மரங்களின் பாகங்கள் முழுவதும் மருத்துவ குணம் வாய்ந்ததாக இருக்கும். அந்த வகையில் அத்தி மரம் முழுவதும் பல ஆயிரம் மருத்துவ குணங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது.

4. அத்தி மரத்தின் அத்தி பழம் மருத்துவ குணம் நிறைந்த பழங்களில் முன்னோடி.

5. அத்தி மரங்கள் மழை நீரை ஈர்க்கும் தன்ன்மை உடையது.

6. ஒரு வருடத்தில் 5 அல்லது 6 முறை காய்கக் கூடிய ஒரே மரமாக அத்தி மரங்கள் இருக்கின்றன.

7. பறவைகள், விலங்குகளுக்கு பிடித்த மற்றும் பசியை போக்கி விருந்து படைக்கக் கூடிய பழமாக இந்த அத்தி பழங்கள் பார்க்கப்படுகின்றன.

8. பொதுவாக ஒரு குறிப்பிட்ட சிலவற்றை குறித்து அனைத்து மதங்களிலும் சிறப்பாக, பெருமையாக பேசப்பட்டிருக்கும். அந்த வகையில் இயேசுநாதர், நபிகள், சித்தர் பெருமான்கள் போன்ற மகான்களால் போற்றப்பட்ட மரமாக பல்வேறு மருத்துவ குணங்கள் அத்தி மரம் திகழ்கிறது.

9. இந்த உலகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற நிலை வரும் போது முதலில் கையில் எடுத்து நட வேண்டிய முக்கிய மரமாக அத்தி மரம் இருக்கும்.

10. ஒரு ஊரில் பத்து அத்தி மரங்கள் இருந்தால் அந்த ஊருக்கு நோய் ஏற்படாது. அதனால் மருத்துவமனையே தேவையில்லை.

11. அதே போல் ஒரு ஊரில் ஆயிரம் அத்தி மரங்கள் இருந்தால் அங்கு பசி, பட்டினி, தாகம் என்ற பேச்சே இருக்காது. அனைத்து உயிர்களும் வயிர் நிறைந்து செழிப்பாக இருக்கும்.

12. அத்தி மரங்கள் உறுதித் தன்மையுடன் இருப்பதால், அதை வைத்து சிலை செய்யும் பழக்கம் நம் முன்னோர்கள் கொண்டிருந்தனர்.

13. முன்பு சிலை மட்டுமல்லாமல், சுவாமிக்கு தேவையான சில பொருட்களை தயார் செய்யவும் இந்த அத்தி மரங்கள் பயன்பட்டன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய ராசி பலன்கள் – 28.02.2025 – வெள்ளிக்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 27.02.2025 – வியாழக்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 26.02.2025 – புதன்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 25.02.2025 – செவ்வாய்க்கிழமை

Pagetamil

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் – 24.02.2025

Pagetamil

Leave a Comment