சிவகங்கை தொண்டி சாலையில் குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு மற்றும் நிர்வாகப் பொறியாளர் அலுவலகங்கள் ஒரே கட்டிடத்தில் உள்ளன. நேற்று நிர்வாகப் பொறியாளர் அலுவலகத்தில் 27 குடிநீர் பராமரிப்புப் பணிகள், கண்காணிப்புப் பொறியளார் அலுவலகத்தில் 6 குடிநீர் பராமரிப்புப் பணிகள் என 33 பணிகள் ரூ.3.5 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டன.
இதில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தரப்பினருக்கும், சிவகங்கை ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சோமன் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு மோதலாக மாறி, இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில் சோமனின் மண்டை உடைந்ததால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் எதிர் தரப்பினரின் காரை சேதப்படுத்தினர். போலீஸார் இரு தரப்பினரையும் சமரசப் படுத்தினர். காயமடைந்த சோமன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1