தலிபான்களிடம் சரணடையும் ஆப்கான் இராணுவ வீரர்கள்; அச்சுறுத்தல் நிறைந்த பகுதிக்கே நேரில் சென்ற ஜனாதிபதி!

Date:

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் பகுதியில் தலிபான்களிடம் 100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் சரணடைந்தனர்.

வீரர்கள் பின்வாங்காமல் உத்வேகத்துடன் போரிட ஊக்குவிக்கும் வகையில் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி மஷார் இ ஷரீஃப் பகுதிக்கு நேரில் சென்றுள்ள நிலையில் அதற்கு சற்று முன்னதாக இராணுவ வீரர்கள் பெருமளவில் சரணடைந்துள்ளனர்.

தலிபான்களிடம் சரணடைந்த பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “குண்டூஸ் விமானநிலையத்தின் அருகே தலிபான்கள் தொடர்ச்சியாக பீரங்கிக் குண்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர். எங்களுக்கு வேறு வழியில்லை. அதனால் சரணடைந்தோம். ஏற்கனவே நூற்றுக்கணக்கான வீரர்கள் சரணடைந்துவிட்டனர். இப்போது நாங்கள் அனைவருமே மன்னிப்புக்காகக் காத்திருக்கிறோம்” என்று வேதனையுடன் கூறினார்.

தலிபான்கள் வசம் 9 மாகாணங்கள்:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அங்கு மேலோங்கி வருகிறது. அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.

முக்கிய நகரங்கள் தலிபான்கள் வசமாகி உள்ளன. உள்நாட்டுப் போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குறுகிய காலத்தில் 9 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். குண்டூஸ், தலூக்கான், ஷேபேர்கான், ஜரான்ஜ், சமங்கன், ஃபாரா உள்ளிட்ட 9 மாகாணங்களை தலிபான்கள் வசம் சென்றுவிட்டது.

உள்ளூர் கொமாண்டோக்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை:

அடுத்ததாக மஷார் இ ஷரீஃப் பகுதியைக் குறிவைத்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதிக்குச் சென்றுள்ளார் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி.

மஷார் இ ஷெரீஃப் வந்துள்ள ஜனாதிபதிர் கனி, அங்கு உள்ளூரில் தலிபான்களை எதிர்ப்பதில் வலுவானவராக உள்ள அட்ட மொகமது நூர் மற்றும் அப்துல் ரஷீத் தோஸ்தும் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மஷாரை மட்டும் ஆப்கானிஸ்தான் இழந்துவிட்டால் அது அரசாங்கத்துக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். அதனால், உள்ளூர் படைகளைக் கொண்டாவது தலிபான்களை ஒடுக்க அந்நாடு முயற்சி செய்துவருகிறது.

மஷார் நகருக்கு விரைந்த அப்துல் ரஷீத் தோஸ்தும், தனது சமூக வலைதளப் பக்கத்தில் தலிபான் களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். 2001இல் ஆயிரக்கணக்கான தலிபான்களை அமெரிக்கப் படைகளுடன் இணைந்து கொன்றவர் அப்துல் ரஷீத் தோஸ்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நாடு பூராகவும் சுகாதாரதுறையினர் 8 கோரிக்கைகளை முன்வைத்து 10 ம் திகதி தொடக்கம் போராட்டம்

இந்த வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு 8...

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை...

குட்டிமணி, தங்கதுரை சிலை விவகாரம் – சதீஸிடம் 3 மணி நேரம் விசாரணை!

வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸிடம் பயங்கரவாத தடுப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்