ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் இந்தியா 48-வது இடத்தைக் கைப்பற்றியது.
ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்று முன்தினம் நாடு திரும்பினர். நாடு திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேதி தேநீர் விருந்து அளிக்க உள்ளார். புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1