போக்குவரத்து சேவைகள் வழக்கம் போல இடம்பெறும்!

Date:

சுகாதார அதிகாரிகள் எந்த தடையும் விதிக்காததால் பொது போக்குவரத்து சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய இராஜாங்க அமைச்சர் அமுனுகம, பொது போக்குவரத்து சேவைகளை மட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் தங்களுக்கு அறிவுறுத்தவில்லை என்று கூறினார்.

நாடு ஒரு முக்கியமான கட்டத்தை கடந்து வருவதால் பேருந்துகள் மற்றும் ரயில்களைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.

பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், சமீபத்திய வாரங்களில் கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அண்மையில் மற்ற விதிமுறைகள் தளர்த்தப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை என்றும், அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் அவசரநிலைக்காக மாகாணங்கள் முழுவதும் பயணம் செய்வதற்காக மட்டுமே பொது போக்குவரத்து சேவைகள் செயல்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

எனினும் கடந்த வாரங்களில் மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களிடம் சோதனைகள் நடத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் ஆலோசனைப்படி, இந்த வாரத்திலிருந்து மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகள் மற்றும் ரயில்களில் சோதனைகள் அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...

அதிகாரப் பகிர்வை வலுப்படுத்த புதிய திட்டம்: டக்ளஸ் தேவானந்தா முன்வைப்பு

மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கு நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் இடமளிக்கப்பட வேண்டும் -  டக்ளஸ்...

கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்கும் ட்ரம்ப்

அடுத்த மாதம் முதல் பல்வேறு கனேடியப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்