தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், அதற்கான சான்றிதழை இனி வாட்ஸ்அப் செயலியில் பெற முடியும்.

Date:

வாட்ஸ்அப்பில் தடுப்பூசி சான்றிதழ் பெறுவது எப்படி?

இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், அதற்கான சான்றிதழை இனி வாட்ஸ்அப் செயலியில் பெற முடியும். இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியில் MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் சாட்போட் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் வாட்ஸ்அப் செயலியில் MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் சாட்போட் அம்சத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. பெருந்தொற்று காலக்கட்டத்தில் போலி செய்தி பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு இதை அறிமுகப்படுத்தியது.

பின் இந்த அம்சம் அருகாமையில் உள்ள தடுப்பூசி மையங்களை அறிந்து கொள்ளும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது தடுப்பூசி சான்று பெறும் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.

தடுப்பூசி சான்றிதழ் பெற முதலில் ஒருவர் குறைந்தபட்சம் தடுப்பூசியின் முதல் டோசை செலுத்தியிருக்க வேண்டும்.

1 – முதலில் மொபைல் போனில் +91 9013151515 என்ற எண்ணை சேமித்துக் கொள்ள வேண்டும். வாட்ஸ்அப் செயலியில் MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் என தேட வேண்டும்.

2 – அடுத்து வாட்ஸ்அப் செயலியின் MyGov Corona Helpdesk- இல் ‘COVID சான்றிதழ்’ அல்லது ‘பதிவிறக்க சான்றிதழ்’ என டைப் செய்து அனுப்ப வேண்டும்.

3- உங்களின் மொபைல் எண்ணுக்கு 6 இலக்க ஒடி.பி. வரும். இதை 30 நொடிகளுக்குள் பதிவிட வேண்டும்.

4 – இனி கோவின் (CoWIN) வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட அனைவரின் எண்களும் காணப்படுகிறது. இதில் உங்களுக்கு யாருடைய சான்றிதழை பெற வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்.

5 – சான்றிதழ் வாட்ஸ்அப் மூலம் பி.டி.எப். (PDF) ஆக அனுப்பப்பட்டு விடும். இதை மிக எளிமையாக டவுன்லோடு செய்ய முடியும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

“நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த ஒட்டுண்ணிக் கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும் என்றும், தனது நீண்டகால...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...

சமூகலைத்தள மூளைச்சலவை: விஜய் வெற்றிக்கு பின்னாலிருந்த ரூட் நிறுவனம்!

திரையுலகில் நடிகராக உச்சம் தொட்ட விஜய், இன்று தமிழக அரசியலில் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்