Pagetamil
முக்கியச் செய்திகள்

4 வாரங்களிற்கு நாட்டை மூடுங்கள்: சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தல்!

வேகமாக பரவி வரும் கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாட்டை குறைந்தது நான்கு வாரங்களுக்கு மூடி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதுபோன்ற ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம் என்று சுகாதார அமைப்பு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

தினமும் கிட்டத்தட்ட 3,000 கோவிட் தொற்றுக்கள் பதிவாகின்றன. தினசரி இறப்பு எண்ணிக்கை 100 ஐ எட்டியுள்ளது.

கடந்த 13 நாட்களில் மட்டும், கிட்டத்தட்ட ஆயிரம் கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன.

பல மருத்துவமனைகளின் பிரேத அறைகளும் கோவிட் சடலங்களால் நிரம்பியுள்ளன. விடுதிகள் கோவிட் நோயாளிகளால் நிரம்பியுள்ளன.

இந்த நிலையில், தற்போதை நிலையில் தொற்றாளர்களை தாங்கும் திறனை மருத்துவமனைகள் இழந்து விட்டதால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

Leave a Comment