தென்மராட்சி பகுதியில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதால் மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
அண்மை நாட்களில் தென்மராட்சி பகுதிகளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள்.
குறிப்பாக நேற்றும் இன்றுமாக நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள்.
வரணி வடிசாலையில் நடத்தப்பட்ட அன்டிஜன் சோதனையில் 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல, வரணி சமுர்த்தி அலுவலகமொன்றிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், பொதுமக்கள் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்த்து, தேவையற்ற ஒன்றுகூடல்களை தவிர்த்து, சுகாதார விதிமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1