Pagetamil
சினிமா

‘வணங்காமுடி’ படத்தில் புதிய சிக்கல்.

‘நான் அவன் இல்லை’, ‘குரு என் ஆளு’ ஆகிய படங்களை இயக்கிய செல்வா இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இப்படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வணங்காமுடி என்ற தலைப்பில் ஏற்கனவே கடந்த 1957-ல் ஒரு படம் வெளியாகி உள்ளது. சிவாஜி கணேசன், சாவித்திரி, நம்பியார் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தை ஏ.கே.பாலசுப்ரமணியம் தயாரித்திருந்தார்.

இந்நிலையில், முறையான அனுமதி பெறாமல் தன்னுடைய தந்தை தயாரித்த படத்தின் தலைப்பை அரவிந்த் சாமி நடித்துள்ள படத்துக்கு பயன்படுத்தி இருப்பதாகவும், இதற்காக சட்டப்போராட்டம் நடத்த தான் தயாராக இருப்பதாகவும் ஏ.கே.பாலசுப்ரமணியத்தின் மகன் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு

Pagetamil

“வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கினார்கள்” – பார்வதி வருத்தம்

Pagetamil

Leave a Comment