பிரபல இசையாமைப்பாளர் நடிக்கும் படத்தில் இசையமைப்பாளரை மாற்றிய படக்குழு.

Date:

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘பேச்சிலர்’ படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்.

 தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜி.வி.பிரகாஷ், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது ‘பேச்சிலர்’ படம் தயாராகி வருகிறது. டில்லிபாபு தயாரித்துள்ள இந்தப் படத்தை சதிஸ் செல்வகுமார் இயக்கி இருக்கிறார். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக இளம் நடிகை திவ்ய பாரதி நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு முதலில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ஒப்பந்தமாக இருந்தார். தொடர்ச்சியாக, திடீரென இசையமைப்பாளரை மாற்றி உள்ளனர். ஜி.வி.பிரகாஷுக்கு பதிலாக திபு நினன் தாமஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே மரகத நாணயம், கனா ஆகிய தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திபு நினன் தாமஸ் இசையில் முதல் பாடல் விரைவில் வெளியிடப்படும் என ‘பேச்சிலர்’ படக்குழு அறிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்