யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் கடற்கரைப்பகுதியில் இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
உதயபுரம் பகுதியைச் சேர்ந்த மனுவல் செபஸ்டியன் (65) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை கடலுக்குச் சென்ற இவர் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1