பண்டாவளையில் திடீரென மயங்கிய விழுந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பண்டாரளை பேருந்து நிலையத்திற்கு நேற்று (09) பிற்பகல் வந்திருந்த 50 வயது மதிக்கத்தக்க நபரொருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவர், பண்டாரவளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவரது சடலத்துக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை, எனினும், பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நகரிலுள்ள உணவகம் ஒன்றுக்கு பகலுணவு உணவு உண்பதற்காக வந்திருந்த மற்றுமொரு நபரும் திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.
அவரும் பண்டாரவளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பல மணி நேரம் சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும், மயக்கம் தெளியவில்லை. அவருக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்ட போது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திடீரென மயங்கிவிழுந்த இருவரையும் உடனடியாக தூக்குவதற்கு எவரும் முன்வரவில்லை, பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின்னர், பொது சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு, அவர்களே, இவ்விருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.