வீடு புகுந்து இளைஞர் குழு அட்டகாசம்

Date:

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வீடு ஒன்றில் புகுந்த இளைஞர் குழு வீட்டில் இருந்த தளபாடங்களை உடைத்து சேதப்படுத்தியதுடன், வீட்டாருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

நேற்று (09.08) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தோணிக்கல், பொதுக்கிணறு வீதிக்கு அருகாமையில் உள்ள பூட்டியிருந்த வீடு ஒன்றிற்குள் புகுந்த இளைஞர் குழு அங்கிருந்த கதிரை, மேசைகளை உள்ளிட்ட வீட்டு தளபாடங்களை உடைத்து சேதப்படுத்தியதுடன், கதவினையும் உடைக்க முயன்றுள்ளனர்.

வெளியில் சென்ற வீட்டு உரிமையாளர்கள் வீட்டிற்கு வந்த போது குறித்த இளைஞர் குழு வீட்டில் நின்றதுடன், வீட்டு உரிமையாளருக்கும் அச்சுறுத்தல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்