பருத்தித்துறையில் 2 ஆலயங்களிற்கு சீல்: திருவிழாவிற்கு போனவர் கொரோனாவால் மரணம்!

Date:

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு கோயில்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

பருத்தித்துறை சுப்பர்மடம் முனியப்பர் கோயில், பருத்தித்துறை சிவன் கோயில் என்பனவே தனிமைப்படுத்தப்பட்டன. அங்கு 14 நாட்களிற்கு வழிபாடுகள் மேற்கொள்ள முடியாது.

முனியப்பர் கோயிலில் நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. பலரும் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.

21ஆம் திகதி வரை கோயில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. வழிபாடுகள் மேற்கொள்ள முடியாது.

இந்த ஆலயத்தில் திருவிழாவில் நேற்று முன்தினம் வரை கலந்து கொண்டிருந்த ஒருவர் (54 வயது) நேற்று திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

பருத்தித்துறை சிவன் கோயிலில் கட்டுப்பாடுகளை மீறி வெளிவீதியில் திருவிழா நடத்தப்பட்டதால், 21ஆம் திகதி வரை அந்த கோயிலும் தனிமைப்படுத்தப்பட்டது.

ஆலய நிர்வாகிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமது ஆலய தனிமைப்படுத்தலை விலக்கிக் கொள்ள அரசியல் தரப்புக்களின் உதவியையும் ஆலயத்துடன் நெருக்கமானவர்கள் நாடியதாக தெரிய வருகிறது. எனினும், அரசியல் தரப்பினர் சுகாதார விதிமுறையை மீறி அழுத்தம் கொடுக்க மறுத்து விட்டதாக தெரிய வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

மதுபோதையில் இ.போ.ச பேருந்து செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுக்க தடை!

மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த...

சிறுவனை சீரழித்த பிக்குவுக்கு 8 வருட சிறை!

அனுராதபுர சிறுவர் குற்றங்களுக்கான சிறப்பு உயர் நீதிமன்ற நீதிபதி சந்துன் விதானகே,...

தீப்பற்றிய மின்சாதன கடை: புகையை சுவாசித்த குடும்பம் பலி

கடுவெலவில் உள்ள மின்சாதனக் கடை ஒன்றில் நேற்று (19) அதிகாலை ஏற்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்