ஒரு வழியுமில்லை: செல்வச்சந்நிதிக்கு செல்ல வீண் முயற்சி வேண்டாம்!

Date:

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழா இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் அனுமதியளிக்கப்படாத எவரும் ஆலயத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

ஆலய நிர்வாகம், உபயகாரர், தொண்டு செய்பவர்கள் என 100 பேருடன் ஆலயத்திற்குள்ளேயே திருவிழா நடத்த இம்முறை அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றை கவனத்தில் கொண்டு, பக்தர்கள் ஆலயத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு, பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இதனை கருத்தில் கொள்ளாமல் இன்று ஆலயத்துக்குச் சென்ற பல நூற்றுக் கணக்கான பக்தர்கள் பொலிஸாரினால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய கொடியேற்றம் இன்று இரவு 8.00 மணிக்கு இடம்பெறுகிறது.

அனுமதிக்கப்பட்ட 100 பேரும் பிசிஆர் அறிக்கையுடன் மட்டுமே உள்நுழைய அனுமதிக்கப்படுவார்கள். இதனால் மக்கள் வீணாக கோயிலுக்கு சென்று, திருப்பி அனுப்பப்படும் அசௌகரியத்தை சந்திக்காமல் வீட்டில் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்