மிரள வைக்கும் நாசா வெளியிட்ட புகைப்படம்.

Date:

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நம் பூமி பந்தை சுற்றி நிகழும் அற்புதங்களை புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறது. செவ்வாய் கிரகம், நெபுலா மேக கூட்டங்கள் என ரம்மியமான புகைப்படங்களால் அதன் சமூக வலைதள பக்கங்களை நாசா அலங்கரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது நிலவின் புகைப்படத்தை நாசா வெளியிட்டு உள்ளது.

53 புகைப்படங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் நிலவின் புகைப்படத்திற்கு “false-colour mosaic” என நாசா பெயரிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் டிசம்பர் 7, 1992 ஆம் ஆண்டு நிலவின் வடக்கு பகுதிகளில் எடுக்கப்பட்டவை ஆகும். இவற்றை கலீலியோ விண்கலம் படம்பிடித்தது.

வியாழன் கிரகத்தை நோக்கிய பயணத்தின் போது இந்த புகைப்படங்களை கலீலியோ விண்கலம் படம்பிடித்தது. நிலவின் வண்ணமயமான புகைப்படங்கள் நாசாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலரின் கவனத்தை ஈர்த்ததோடு, லட்சக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்