” ‘அசுரன்’ மாதிரி ஒரு படம் பண்ணணும்” – சிம்புவின் ஆசை.

Date:

பிரீமியம் ஸ்டோரி ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதற்கான படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என எதிர்பார்த்திருந்த போது, புதிய டைட்டிலுடன் சிம்புவின் 47-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ‘வெந்து தணிந்தது காடு’ என்ற டைட்டிலுடன் வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு இருக்கும் புகைப்படமும் வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ தலைப்பு ‘வெந்து தணிந்தது காடு’ என மாற காரணம் என்ன என விசாரித்தோம்.

இயக்குநர் கெளதம் மேனன் – சிம்பு கூட்டணியில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக ‘விண்ணைத்தாண்டி வருவாயா – 2’ படத்தில் இணையவிருக்கிறார்கள் என்ற தகவல்கள் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியானது. அந்தப் படத்தை ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிப்பதாகவும் அதற்காக கெளதம் மேனன் – சிம்புவுக்கு அட்வான்ஸ் தரப்பட்டது என்றும் சொல்லப்பட்டது. அது கெளதம் மேனன் கடன் பிரச்னையால் சிக்கலில் இருந்த சமயம். அப்போதுதான், ஐசரி கணேஷ் மூலம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ வெளியானது. ‘ஜோஷுவா இமை போல் காக்க’ ஆரம்பமானது.

‘வெந்து தணிந்தது காடு’
கெளதம் மேனன் ஒரு பக்கம் பிஸியாக இருக்க, சிம்பு ஒரு பக்கம் பிஸியாக இருக்க, ‘விண்ணைத்தாண்டி வருவாயா – 2’ நடக்கவில்லை. பின், ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் – சிம்பு – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ அறிவிப்பு வெளியான சில வாரங்களில் கொரோனா இரண்டாம் அலை வந்து சினிமாத்துறையை ஸ்தம்பிக்க செய்தது. இந்த இடைவெளியில் சிம்பு, கெளதம் மேனனிடம் தனுஷின் ‘அசுரன்’ போல கனமான கதைக்களம் கொண்ட படம் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார். இதனால் ஏற்கெனவே வைத்திருந்த கதைக்கு பதிலாக எழுத்தாளர் ஜெயமோகனின் ‘அக்னி குஞ்சொன்று கண்டேன்’ என்ற கதையை படமாக்கும் உரிமையை வாங்கி அதற்கான பணிகளில் ஈடுபட்டார் கெளதம் மேனன். அதுதான் ‘வெந்து தணிந்தது காடு’.

விரைவில் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து சிம்பு – கெளதம் மேனன் கூட்டணியின் ‘வெந்து தணிந்தது காடு’ வெற்றிபெறவேண்டும் என்பதே அவர்களது ரசிகர்களின் ஆசை!

 

spot_imgspot_img

More like this
Related

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு – பெருந்தொற்றுகளைத் தடுப்பதில் முக்கிய முன்னேற்றம்

எதிர்காலத்தில் உலகை அச்சுறுத்தக்கூடிய புதிய வைரஸ்கள் மற்றும் பெருந்தொற்றுகளில் இருந்து மனிதகுலத்தைப்...

குரு-சந்திர சேர்க்கையால் உருவான சமசப்தக் யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றியும் செல்வமும் குவியுமா?

ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் ஜோதிட ரீதியாக பல சுப யோகங்கள் உருவாகி...

முச்சக்கர வண்டியின் மீது மரம் விழுந்து 3 பேர் பலி

நாவலப்பிட்டியிலிருந்து மப்பகந்த பகுதிக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது யூக்கலிப்டஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்