மலச்சிக்கல் என்பது மலம் வெளியேறுவது கடினமாகும் நிலை ஆகும். இது உயிருக்கு ஆபத்தான நிலை அல்ல ஆனால் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் இதற்கு சிகிச்சை அளிக்க முடியும். மலமிளக்கி நிலையை அகற்ற பழச்சாறுகள் உதவும் மலச்சிக்கலில் குறுகிய காலத்தில் நிவாரணம் அளிக்கும். நீண்ட கால மலச்சிக்கல் என்பது மருத்துவ நிலை தேவைப்படும் நிலையாக இருக்கலாம். இந்த பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். அதில் பழச்சாறுகள் அடங்கும்.
மலச்சிக்கலுக்கு அப்பிள் ஜூஸ்
தேவையான பொருள்கள்
அப்பிள் விதைகள் நீக்கியது – 1
பெருஞ்சீரகம் பொடி – அரை டீஸ்பூன்
தண்ணீர் – அரை கப்
அப்பிளை நறுக்கி ப்ளெண்டரில் சேர்த்து மசிக்கவும். இதை டம்ளரில் ஊற்றி பெருஞ்சீரகப் பொடியை சேர்த்து நன்றாக கிளறவும். அப்பிள்களில் நார்ச்சத்து தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அப்பிள் முழுவதுமாக சாறாக்கி எடுப்பதன் மூலம் மலச்சிக்கலை தடுக்கலாம். பெருஞ்சீரக விதை பொடியில் உணவு நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மலத்தில் நீரை தக்கவைத்து மலம் கழிக்காமல் மலசிக்கலை தடுக்க உதவுகிறது.
மலச்சிக்கலுக்கு திராட்சை சாறு
தேவையான பொருள்கள்
கருப்பு திராட்சை – அரை கப்
இஞ்சி – சிறு துண்டு அளவு
கருப்பு உப்பு – ருசிக்கேற்ப
தண்ணீர் – தேவைக்கேற்ப
செய்முறை
சுத்தம் செய்த திராட்சையின் விதையை நீக்கி சாறை எடுக்கவும். பிறகு ப்ளெண்டரில் திராட்சை, நறூக்கிய இஞ்சி மற்றும் தண்ணீர் சேர்க்கவும். இதை மசித்து வடிகட்டாமல் டம்ளரில் ஊற்றவும். பிறகு தேவைக்கேற்ப கருப்பு உப்பு சேர்த்து கொடுக்கவும். உடலை ஈரப்பதமாக்கி மலத்தை இளக்கி வெளியேற்றும். திராட்சையில் இருக்கும் சோர்பிடோல் என்ற சர்க்கரை ஆல்கஹால் உள்ளது. இது அதிக தண்ணீரை வைத்திருக்கிறது. மேலும் மலம் கடினமாவதை தடுத்து இளக்கி வெளியேற்றுகிறது மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. செலவு குறைந்த இயற்கை மலமிளக்கியாகும்.
மலச்சிக்கலுக்கு ஆரஞ்சு சாறு
தேவையான பொருள்கள்
ஆரஞ்சு சுளை – 1 கப்
கருப்பு உப்பு – சிட்டிகை
ஆரஞ்சுசுளைகளை ப்ளெண்டரில் சேர்த்து அரையுங்கள். விதைகளை வெளியேற்றிவிடுங்கள். இந்த சாற்றை கண்ணாடி டம்ளரில் விட்டு சிட்டிகை கருப்பு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். ஆரஞ்சுபழம் விட்டமின் சி, தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. நார்ச்சத்து நீரை தக்கவைக்க உதவுகிறது. மேலும் மலத்தை இளக்கி வைக்கிறது. இது குடல் இயக்கத்தை தூண்டி மலத்தை வெளியேற்றுகிறது.
மலச்சிக்கலுக்கு பேரிக்காய் சாறு
தேவையான பொருள்கள்
பேரிக்காய் – 2 (விதைகள் நீக்கியது)
எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்
கருப்பு உப்பு – 1 சிட்டிகை
பேரிக்காயை நறுக்கி விதைகள் நீக்கி ப்ளெண்டரில் அரைத்து எடுக்கவும். இதை மசித்து இதன் சாற்றை கண்ணாடிக்குள் ஊற்றவும். எலுமிச்சை சாறு மற்றும் சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து எடுக்கவும். பேரீக்காய் நீரிழிவு இருப்பவர்களும் எடுத்துகொள்ள வேண்டியது தான். இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதில் இருக்கும் சார்பிடோலின் அளவு இரண்டு மடங்கு உள்ளது. இது குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது.
மலச்சிக்கலுக்கு ப்ரூனே சாறு
தேவையான பொருள்கள்
கொடி முந்திரி என்று சொல்லப்படும் ப்ரூனே பழங்கள் – 6
தேன் – அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் – 1 கப்
ப்ரூனே பழத்தை வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கவும். சில நிமிடங்கள் கழித்து மென்மையாகும் போது அதில் இருக்கும் விதைகள் வெளியேற்றி தண்ணீர் சேர்த்து ப்ளெண்டரில் அரைத்துவிடுங்கள். பிறகு தேன் மற்றும் சீரக தூள் சேர்க்கவும். இதை நன்றாக கலந்து குடிக்கவும். ப்ரூனே பழம் நார்ச்சத்து மற்ரும் சார்பிடால் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது குடல் இயக்கத்தை விரைவுபடுத்த உதவுகிறது. சீரகம் நல்ல குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது மேலும் இது சுவைக்கூட்டவும் செய்கிறது.
மலச்சிக்கலுக்கு செர்ரி சாறு
தேவையான பொருள்கள்
செர்ரி பழம் – 1 கப்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
தண்ணீர் – அரை கப்
கருப்பு உப்பு – ருசிக்கேற்ப
செர்ரிபழம் கழுவி விதைகளை அகற்றவும். இதில் செர்ரி சேர்த்து ப்ளெண்டரில் அரைக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து ருசிக்கு உப்பு சேர்த்து கலந்து விடவும். செர்ரிகளில் பாலிபினால்கள் நீர் மற்றும் நார்ச்சத்து உள்ளது. செர்ரிகளில் உள்ள நார்ச்சத்து மலத்தை இளக்க செய்யும். செர்ரிகளில் பாலிபினால்கள், நீர் மற்றும் நார்ச்சத்து உள்ளது. செர்ரிகள் மலத்தை மென்மையாக வெளியேற்றுகிறது.