திருமண தடையை ஏற்படுத்தும் புனர்பூ தோஷத்துக்கான பரிகாரங்கள்
ஒருவரது ஜாதகத்தில் புனர்பூ தோஷம் இருந்தால் அவருக்கு திருமணம் நிச்சயம் ஆகி பின்பு திடீரென திருமணம் நின்று போகும் அல்லது இரு வீட்டாரும் நல்ல மனநிலையில் இருந்து சுபகாரிய பேச்சுவார்த்தை நடந்து திடீர் என்று ஒரு பிரச்சனை மற்றும் காரணத்தால் திருமணம் தடைபெறுவது, திருமண தேதி குறித்த பின்பு இருவீட்டாருக்கும் சண்டை ஏற்படுவதை தவிர்த்து காலதாமதம் ஏற்படுத்துதல் நிகழும்.
திருமணம் நடைபெற்றாலும் திருமணத்திற்கு பின் தம்பதிகளுக்கு உடல் நிலை பாதிக்கப்படுவது, தீராத வியாதியால் வாழ்நாள் முழுவதும் அவதிப்படுவது, இரு தார யோகம் ஏற்படுவது, திருமணம் செய்து சில நாட்களிலேயே பெண் தன் தாய் வீட்டிற்கு வந்து விடுவது, கணவன் மற்றும் மனைவி இருவரில் ஒருவர் சீக்கிரமாகவே இறந்துவிடுவது போன்ற துர்சம்பவங்கள் ஏற்படுகின்றன.
புனர்பூ தோஷத்துக்கான பரிகாரங்கள்.
புனர்பூ ஜாதக அமைப்பு கொண்டவர்கள் திருமணஞ்சேரி தலத்திற்கு சென்று பரிகாரம் செய்தால் இந்த தோஷத்திலிருந்து விடுபடலாம். குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி சென்று வரலாம். முடி காணிக்கை செலுத்துவது நல்லது.
தொடர்ச்சியாக வரும் மூன்று பவுர்ணமி நாட்களில் விரதம் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று, ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்தால் திருமண தடை நீங்கி உடனடியாக நல்ல வரன் அமையும்.