விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் இத்தனை வில்லன்களா?
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன், தற்போது விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெறும் வருகின்றது.
தற்போது, படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ‘பீஸ்ட்’ படத்தில் 3 வில்லன்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒருவராக மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடித்து வருவதாகவும், மற்றவர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.