24.8 C
Jaffna
January 26, 2025
Pagetamil
மருத்துவம்

நுரையீரல் அழற்சி குறையா?

நிமோனியா என்பது மோசமான நோயின் உபாதை. இது தீவிரமாகும் போது உயிருக்கே ஆபத்தான நிலையை உண்டாக்கும். ஆரம்ப கட்ட நிலையில் இதை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியம் என்னென்ன என்பதை பார்க்கலாம். தும்மல், மூச்சுத்திணறல், இருமல் மற்றும் காய்ச்சல் இருக்கும் போது நீங்கள் நிமோனியாவை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். இந்த தொற்று உயிருக்கு ஆபத்தான விளைவுகளை உண்டாக்கலாம். குறிப்பாக குழந்தைகள் வயதானவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஆரம்ப கட்டங்களில் நிமோனியாவுக்கு சிகிச்சை அளிக்க உதவும் சில அற்புதமான வீட்டு வைத்தியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சேர்த்து தேன் கலந்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை நாள் முழுவதும் சிறிது சிறிதாக எடுத்துகொள்ளுங்கள். தினமும் இதை எடுத்துகொள்ளலாம். ஆப்பிள் சீடர் வினிகர் நிமோனியாவை உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராட உதவும் அழற்சி எதிர்ப்பு ,பாக்டீரியா எதிர்ப்பு , ஆன் டி வைரல் மற்றும் பூஞ்சை காளான் பண்புகளை வெளிப்படுத்துகிறது.

பூண்டு பற்களை மென்று சாப்பிடலாம் அல்லது உணவில் சேர்க்கலாம். இந்த பூண்டை நசுக்கி அந்த பேஸ்ட்டை உங்கள் மார்பில் தடவி விடவும். தினமும் ஒரு முறை இதை செய்து வரவும். பூண்டு நிமோனியாவுக்கு சிறந்த இயற்கை சிகிச்சைகளில் ஒன்றாகும். இது அலிசின் என்னும் கலவையை கொண்டுள்ளது. இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளை வெளிப்படுத்துகிறது. மேலும் தொற்று நோயை எதிர்த்து போராட இவை உதவுகிறது. இது ஒரு எதிர்ப்பு மருந்தாகவும் செயல்படுகிறது மற்றும் உங்கள் நுரையீரல் மற்றும் தொண்டயிலிருந்து சளியை அழித்து வெளியேற்றுகிறது.

விட்டமின் சி குறைபாடு நிமோனியாவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். வைட்டமின் சி அஸ்கார்பிக் அமிலம் அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது மற்ற பொருள்களின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் அதிகரிக்கிறது. இந்த பண்புகள் நிமோனியா மற்றும் அதனால் உண்டாகும் அறிகுறிகளை சமாளிக்க உதவுகிறது.

சிட்ரஸ் பழங்கள், கொட்டைகள், இலை காய்கறிகள் போன்ற உணவுகளில் வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் சி நிறைவாக எடுத்துகொள்ள விரும்பினால் மருத்துவரை அணுகி சேர்க்கலாம். கேரியர் எண்ணெய் – ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன்
இரண்டு எண்ணெயும் கலந்து இதை மார்பு மற்றும் முதுகில் தடவி விடவும். இதை தினமும் இரண்டு முறை செய்து வந்தால் போதும். புதினா எண்ணெய் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் வலி நிவாரணி பண்புகளை வெளிப்படுத்துகிறது இது நிமோனியாவை எதிர்த்து போராடுகிறது. இயற்கையாகவே தொற்றுநோயுடன் வரும் சிக்கலை எதிர்த்து போராட உதவுகிறது.

ஒரு கிண்ணத்தில் சூடான நீரில் சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெய் சேர்க்கவும். இதை நீராவி பிடிக்கவும். ஆழமாக மூச்சை உள்ளிழுத்து நீராவியை உள்ளிழுக்கவும். இது உடனடி நிவாரணம் கிடைக்க செய்யும். யூகலிப்டஸ் எண்ணெய் யூகலிப்டஸ் மரத்தின் இலைகளிலிருந்து பெறப்பட்டது. அதன் மருத்துவ குணங்களுக்காக பரவலாகவே பயன்படுத்தப்படுகிறது. இது அழற்சி எதிர்ப்பு வலி நிவாரணி, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் டிகோங்கஸ்டண்ட் பண்புகளை கொண்டுள்ளது. இவை நிமோனியா சிகிச்சைக்கு உதவியாக இருக்கும்.

​வெந்தய விதைகள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை சிகிச்சையளிப்பதற்கு சாத்தியமானவை. சில சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகின்றன. இது நிமோனியாவின் வீக்கம் மற்றும் பிற அறிகுறிகளை போக்க உதவும். தினமும் காலை உணவாக அல்லது சிற்றுண்டியாக ஆப்பிள் எடுத்துக்கலாம். நீங்கள் ஒரு கப் தண்ணீருடன் ஆப்பிளை துண்டுகளாக்கி சாப்பிடலாம். தினமும் ஆப்பிளை தவறாமல் எடுத்துகொள்ளுங்கள். ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் நிம்மோனியாவுக்கு சிகிச்சையளிக்கவும் அதை தீவிரமாகாமல் தடுக்கவும் உதவுகிறது. ஆப்பிளி உள்ள பைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் ஃப்ள்வனாய்டுகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. மேலும் நுரையீரல் வீக்கத்தை குறைக்க உதவும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment