25.6 C
Jaffna
January 10, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

நாடு முடக்கப்படாது: சில கட்டுப்பாடுகள்!

ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில், தற்போதைய சுகாதார நிலைமை காரணமாக நாட்டை மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, எனினும், சில கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என்றார்.

இதன்படி, 500 அல்லது 500ற்கு அதிகமானோர் அமரும் வகையிலான திருமண மண்டபமொன்றில் 150 பேரை மாத்திரம் அனுமதிக்கப்படுவோர்.

அத்துடன், 500ற்கு குறைவானோர் அமரும் வகையிலான திருமண மண்டபத்தில் 100 பேரை மாத்திரம் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகளில் பங்கேற்க 25 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

அரச ஊழியர்கள் அனைவரையும் அழைக்கும் சுற்றறிக்கையை மாற்றியமைத்து, கடமைக்கு அழைக்க வேண்டிய நபர்களை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரம் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, செப்டம்பர் 1 வரை அனைத்து அரச விழாக்களும் இரத்து செய்யப்பட்டன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

முல்லைத்தீவில் கரையொதுங்கியவர்கள் உண்மையான அகதிகளா என ஆராய்கிறதாம் அனுர அரசு!

Pagetamil

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

Leave a Comment