24.8 C
Jaffna
January 26, 2025
Pagetamil
மருத்துவம்

சிறுநீர் ஆடையில் கசிந்துவிடுகிறதா?

சிறுநீர்ப்பை நிறைந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்னும் உணர்வு வரும் போது சிறுநீர் கழிப்பதுண்டு. ஆனால் சிறுநீர்க்கசிவு என்பது சிறுநீர் கழிக்க வேண்டும் என்னும் உணர்வு வரும் போதெ ஆடையில் கசிந்துவிடுவது ஆகும். திடீரென்று சிறுநீர் கழிக்க தூண்டுவதோடு அதை கட்டுபடுத்தவும் இயலாத நிலையை இவை உண்டாக்கிவிடலாம். இது சிறுநீர் அடங்காமை அல்லது சிறுநீர் கசிவு போன்றவையும் உண்டாகிவிடலாம். இந்த சிறுநீர்கசிவு பிரச்சனை இருப்பவர்களுக்கான இயற்கை வைத்தியம் என்ன, இதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
​சிறுநீர்க்கசிவு என்பதற்கான அறிகுறிகள் எப்படி இருக்கும்.

அதிகப்படியான சிறுநீர்ப்பைக்கான குறிப்பிட்ட காரணம் துல்லியமாக தெரியவில்லை என்றாலும் பொதுவாக சிறுநீர்ப்பையின் தன்னிச்சையான சுருக்கங்களின் விளைவாகும். இதற்கு வீட்டு வைத்தியங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

பூசணி விதைகளை தினசரி சாலட் சேர்க்கலாம். பூசணி விதை எண்ணெயை தினமும் எடுத்துகொள்ளலாம். தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சேருங்கள். பூசணி விதை எண்ணெயில் குக்கர்பிடா பெபோ மற்ரும் குக்குர்பிடா மேக்ஸிமா உள்ளது. இது அதிகப்படியான அறிகுறிகளை குறைக்க உதவும். பூசணி விதை எண்ணெயை எடுத்துகொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

க்ரீன் டீ பேக் ஒரு கப் சூடான நீரில் 5-10 நிமிடங்கள் சேர்த்து ஊறவைத்து இளஞ்சூடாக இருக்கும் போது குடித்து விடுங்கள். தினமும் இரண்டு முறை குடித்து வரலாம.

க்ரான் பெர்ரி – 400 மில்லி அளவு எடுத்து தினமும் ஒரு டம்ளர் அளவு குடிக்கலாம். சிறுநீர்பை அதிகமாக செயல்படுவதற்கான காரணங்களில் சிறுநீர்பாதை தொற்றும் அடங்கும்.

ஒரு கப் சூடான நீரில் ஒரு டீஸ்பூன் ஜின்செங் சேர்த்து கொதிக்கவிடவும். 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு பிறகு வடிகட்டவும். தேநீர் குடிப்பதற்கு இளஞ்சூடாக இருந்தால் போதுமானது. சிறுநீர் கசிவு கட்டுக்குள் வரும் வரை தினமும் இரண்டு முறை இதை குடிக்கலாம்.

அதிகப்படியான சிறுநீர்ப்பை சிக்கலாக மாறி தீங்கற்ற புரோஸ்டேடிக் ஹைப்பர் பிளேசியாவுக்கு வழிவகுக்கும். இது புரோஸ்டேட் சுரப்பியின் விரிவாக்கத்துக்கு உதவும். இது நரம்பு வளர்ச்சி காரணி செயல்பாட்டிற்கும் உதவுகிறது.

வெதுவெதுப்பான நீரில் சமையல் சோடா சேர்த்து நன்றாக கலந்து விடவும். இதை குடிக்கலாம். தினமும் இரண்டு முறை இதை குடித்து வரலாம். ஒரு கப் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் கெமோமில் டீ சேர்த்து கொதிக்கவிடவும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை வைத்து இறக்கி இளஞ்சூடாக இருக்கும் போது வடிகட்டி வைக்கவும். இதை தினமும் 1 அல்லது 2 முறை குடிக்கலாம்.

கெமோமில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகப்படியான சிறுநீர்ப்பை அறிகுறிகளை போக்க உதவும். குறிப்பாக இரவு நேரங்களில் இந்த பிரச்சனையை எதிர்கொண்டால் நீங்கள் கெமோமில் டீ தொடர்ந்து எடுக்கலாம்.

​அதிகப்படியான சிறுநீர்க்கசிவு தீவிரமாகாமல் தடுக்க உதவும் உணவுகள்! கொழுப்பு மீன், சீஸ் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகள், வாழைப்பழங்கள், ஆரஞ்சு, பாகற்காய், வெள்ளரிக்காய் மற்றும் ஆப்ரிகாட் போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகள் அதிகம் சேர்க்கலாம். பருப்பு, பீன்ஸ், ராஸ்பெர்ரி மற்றும் பார்லி போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மலச்சிக்கலை தடுக்கவும் செய்யும். மீன், கோழி மற்றும் டோஃபு போன்ற புரதம் நிறைந்த உணவுகள்.

​சிறுநீர்க்கசிவு இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் பானங்கள்!
கார்பனேட்டர் பானங்கள், காஃபைன் அதிகம் கொண்ட பானங்கள்,
மதுப்பழக்கம், சாக்லேட்டுகள்,
சிட்ரஸ் பானங்கள்,காரமான உணவுகள், செயற்கை சுவைகள்.
சர்க்கரை, தேன்,

​சிறுநீர்க்கசிவு இருக்கும் போது செய்ய வேண்டிய குறிப்புகள், இடுப்பு தசைகளை வலுப்படுத்த உதவும் கெகல் பயிற்சிகளை செய்யுங்கள். ஆரோக்கியமான எடையை பராமரியுங்கள். சிறுநீர் கழிக்க சிறுநீர்ப்பைக்கு பயிற்சி அளிக்கவும். ஒவ்வொரூ 20- 30 நிமிடங்களுக்கும் பதிலாக ஒவ்வொரு 3 – 4மணி நேரத்துக்கும் சிறுநீர் கழிக்க படிப்படியாக பழகுவதுதான்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment