29.5 C
Jaffna
April 10, 2025
Pagetamil
சினிமா

இந்தியன் 2′ பட விவகாரத்தில் லைக்கா நிறுவனம் மேல் முறையீடு

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் உட்பட பலர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் உருவாகிறது. படப்பிடிப்பு லாக்டவுன், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்திற்குப் பிறகு நடக்காமல் தேங்கி நிற்கிறது. சமீபத்தில் இந்தியன் 2 பட விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது லைக்கா நிறுவனம்.

நீண்ட கால ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் இந்தியன் 2. கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, லாக்டவுன் என பல காரணங்களால் படத்தின் வேலைகள் தொடங்கப் படாமலேயே இருந்தன. இதனால் அவரது அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டார் ஷங்கர்.

தெலுங்கில் ராம்சரனை வைத்து ஒரு திரைப்படம். இந்தியில் அந்நியன் திரைப்படம் ரீமேக் என அவரது அடுத்தடுத்த பட வேளையில் இறங்கினார் ஷங்கர். இதனால் சுதாரிப்படைந்த லைக்கா நிறுவனம், இந்தியன் 2 படத்தை முடிக்கும் வரை சங்கர் வேறு படங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தது லைக்கா நிறுவனம். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தொடர்ச்சியாக, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, லைக்கா நிறுவனம் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது. இந்த மனுவானது இன்று, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ​​லைக்கா தரப்பில், தனி நீதிபதியின் உத்தரவு நகல் இல்லாமல், மேல் முறையீட்டு வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, லைக்கா நிறுவனத்தின் மேல் முறையீட்டு வழக்கை, தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல், விசாரணைக்குப் பட்டியலிடப்பட்ட பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க இயக்குனர் ஷங்கர், ராம்சரணை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவதில் பிசியாகி விட்டார். அண்மையில் இந்த படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானியை படக்குழுவினர் அறிவித்தனர்.

இதையும் படியுங்கள்

ஒரு பாடலுக்கு மீண்டும் நடனமாடும் தமன்னா!

Pagetamil

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

Pagetamil

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!