இன்றைய வானிலை

Date:

மழை நிலைமை : புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் சிலாபத்தில் இருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் சிலாபத்தில் இருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். சிலாபத்தில் இருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

-வளிமண்டலவியல் திணைக்களம்-

spot_imgspot_img

More like this
Related

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...

BYD கார் காட்சியறை திறப்பு மட்டக்களப்பு

ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் BYD கார் விற்பனை நிலையத்தின்...

காரைதீவில் பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்தும் “மக்கள் உணவகம்” திறப்பு

காரைதீவு கல்முனை பிரதான வீதியில், காரைதீவு பிரதேச செயலகத்திற்கு எதிரில், "1967...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்