நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு இடங்களில் அடுத்தடுத்து சங்கிலி, தாலி அறுத்த மர்ம நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
இன்று காலை இந்த சம்பவம் நடந்தது.
மாலைசந்தி பகுதியில் காலை 10.25 அளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணொருவரின் தங்கச்சங்கிலி அறுக்கப்பட்டது. இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் சங்கிலி அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அவர் தங்கச்சங்கிலியை இறுகப்பிடித்ததால், ஒரு பகுதி மட்டுமே திருடர்களின் கையில் சென்றது.
அந்த இளைஞர்கள் பருத்தித்துறை வீதியினால் யாழ்ப்பாணம் நோக்கி சென்றனர். 10.35 மணியளவில் புறாப்பொறுக்கி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருந்த இளம்பெண்ணொருவரை நிலத்தில் தள்ளிவீழ்த்தி, தாலியை அறுத்து சென்றனர். அந்த பெண் தாலியை இறுக பிடித்ததால், தாலியின் பெரும் பகுதி அவரது கையிலேயே இருந்தது.
இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்களையும் அடையாளம் காணும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.