24.7 C
Jaffna
January 7, 2025
Pagetamil
இலங்கை

நேற்று மாவட்டரீதியாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம்!

நாட்டில் நேற்று (4) ஆறு மாவட்டங்களில் 100 க்கும் மேற்பட்ட COVID-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நேற்று நாடு முழுவதும் 2,561 COVID-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இலங்கையில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 318,755 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று கம்பஹா மாவட்டத்தில் இருந்து 393 பேர், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 388 பேர், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 382 பேர், மாத்தறை மாவட்டத்தில் இருந்து 250 பேர், கண்டி மாவட்டத்தில் இருந்து 200 பேர், மொனராகலை மாவட்டத்தில் இருந்து 116 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் இருந்து 98 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 96 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 91 பேர், நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 83 பேர், பதுளை மாவட்டத்தில் இருந்து 73 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 72 பேர், காலி மாவட்டத்தில் இருந்து 51 பேர், திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 50 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து 47 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து 35 பேர்,  குருநாகல் மாவட்டத்தில் இருந்து 34 பேர், கேகாலை மாவட்டத்தில் இருந்து 33 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 23 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 10 பேர், புத்தளம் மாவட்டத்தில் இருந்து 8 பேர், மன்னார் மாவட்டத்தில் இருந்து 4 பேர், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் வவுனியா மாவட்டங்களில் இருந்து தலா 2 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 18 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு

east tamil

பண்டாரகமவில் பழ வியாபாரியிடம் 150,000 ரூபா கொள்ளை

east tamil

மாணவியுடன் ஆபாச காணொளிகள் பகிர்ந்த பாடசாலை ஆசிரியை கைது

east tamil

கைதிகளை விடுவிக்கக் கோரி கையெழுத்து போராட்டம்

Pagetamil

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் கருத்தறியும் கூட்டம்

Pagetamil

Leave a Comment