அனைத்து ஊழியர்களையும் பணிக்கு அழைக்கும் சுற்றறிக்கைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Date:

கோவிட் -19 க்கு மத்தியில் அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு திரும்ப அழைக்கும் முடிவின் காரணமாக, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உட்பட பல தரப்பினர் ஆபத்தில் இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன சூரியராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்து ஊழியர்களையும் பணிக்கு அழைக்கும் அரசின் முடிவின் காரணமாக, சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டியவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன. தற்போது கோவிட் -19 வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டிள்ளார்.

சுழற்சி முறையில் ஊழியர்களை பணிக்கமர்த்தும் சுற்றறிக்கையை இரத்து செய்து, அனைத்து அரச துறை ஊழியர்களையும் பணிக்கு அழைக்கும் சுற்றறிக்கைக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தமது தொழிற்சங்கம் புகார் அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த சுற்றறிக்கை பல்வேறு தரப்பினருக்கு- குறிப்பாக கரப்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளையும் நீக்கியுள்ளது. இதன் விளைவாக, பல்வேறு தரப்பினர் கடுமையான ஆபத்தில் இருப்பதாக அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...

விபத்தில் பின்னாலிருந்த காதலி மரணம்: காதலன் எடுத்த விபரீத முடிவு!

பாடசாலைப் பருவத்திலிருந்தே காதலித்து வந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனுடன்...

ஷிராந்தி இன்று தேசிய கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை, கொழும்பு தேசிய கண் மருத்துவமனையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்