‘பொன்னியின் செல்வன்’ படத்தில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம்?
‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் பல்வேறு மொழிகளில் இருந்தும் முன்னணி நடிகர்-நடிகைகள் நடித்து வருகின்றனர். ரூ .800 கோடி பட்ஜெட்டில் தயாராகும் படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாகம் அடுத்தது வெளியிடப்படும் என படக்குழு முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரச்சோழனாக பிரகாஷ் ராஜ், நந்தினியாக ஐஸ்வர்யாராய், குந்தவியாக திரிஷா, பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும் நடிக்கின்றனர்.
அதேபோல் பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடித்துள்ளார். ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராமும், கந்தன் மாறன் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபுவும் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.