மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற ‘நாயாட்டு’ படத்தின் தமிழ் ரீமேக்கை கெளதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக சிம்பு நடிப்பில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். இந்தப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு தொற்றி கொண்டுள்ளது. இந்நிலையில் மலையாள ‘நாயாட்டு’ படத்தின் தமிழ் ரீமேக்கை கெளதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வருண் நடிப்பில் ‘ஜோஷ்வா’ படத்தை இயக்கி முடித்துள்ளார் கெளதம் மேனன். இந்த படத்தை தொடர்ந்து தற்போது சிலம்பரசன் நடிப்பில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தை இயக்கி வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக சிம்பு, கெளதம் கூட்டணிக்கு இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். ‘ஜோஷ்வா’ மற்றும் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படங்களை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘நாயாட்டு’ படத்தின் தமிழ் ரீமேக்கை கெளதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மார்டின் பிரகாட் இயக்கத்தில் குஞ்சக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘நாயாட்டு’. வசூல் மற்றும் விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவுகிறது.
இந்த படத்தின் தெலுங்கு உரிமையை அல்லு அரவிந்தும், இந்தி உரிமையை ஜான் ஆபிரஹாமும் வாங்கியுள்ளனர். தமிழில் ஐசரி கணேசனின் வேல்ஸ் இன்டர்நேஷனல் ‘நாயாட்டு’ படத்தின் உரிமையை கைபற்ற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கெளதம் மேனனின் இரண்டு படங்களை ஐசரி கணேஷ் தயாரித்து வருவதால், நாயாட்டு படத்தின் தமிழ் ரீமேக்கையும் கெளதம் மேனன் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.