கன்னட பவர்ஸ்டார் புனீத் ராஜ்குமார் நடிக்கும் த்வித்வா படத்தில் த்ரிஷா தான் ஹீரோயின் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பவர்ஸ்டார் என்று தலைப்பில் பார்த்ததும் நம்ம பவர் சீனிவாசன் என்று நினைத்தால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது. இந்த பவர்ஸ்டார் கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார்.
பவன் குமார் இயக்கத்தில் பவர்ஸ்டார் புனீத் ராஜ்குமார் த்வித்வா என்கிற த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் த்ரிஷா தான் ஹீரோயினாக நடிக்க முடியும் என்று பேச்சு கிளம்பியது. தொடர்ந்து த்வித்வா படத்தின் ஹீரோயின் த்ரிஷா என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை பார்த்த திரிஷா பவர்ஸ்டாவுடன் சேர்ந்து நடிப்பதில் மகிழ்ச்சி என்று ட்வீட் செய்துள்ளார்.
த்வித்வா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை மாதம் 1 ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த படத்தில் புனீத் ராஜ்குமாரை வித்தியாசமாக பார்ப்பீர்கள் என்று இயக்குநர் கூறினார். த்வித்வா படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. பவர்ஸ்டாருடன் திரிஷா ஜோடி சேர்வது இது இரண்டாவது முறை ஆகும்.
விஜய் சேதுபதியுடன் சேர்ந்து 96 படத்தில் நடித்த பிறகு த்ரிஷாவின் கெரியர் மீண்டும் பிக்கப்பாகிவிட்டது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளும் த்ரிஷாவை தேடி வருகிறது. தனக்கு எது பிடிக்கிறதோ அந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது தான் த்வித்வா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.