பருத்தித்துறை புலோலி சாரயடிப் பகுதியில் நடைபெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (4) மாலை இந்த சம்பவம் நடந்தது.
புலோலி சாரயடிப் பகுதியைச் சேர்ந்த செபஸ்ரியன் பாலேந்திரன் (82) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீதியின் எதிர்ப் பக்கமாக உள்ள தனது வீட்டிற்கு திரும்ப முற்பட்ட வேளையில் வீதியால் வந்த கப் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1