நம் எல்லோருக்கும் தெரியும் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு மட்டுமல்ல தாய்க்கும் மிகச்சிறந்த நன்மைகளை அளிக்கக் கூடியது. பொதுவாக பிரசவத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் உடல் நிலையில் பல வகையான மாற்றங்கள் நிகழ்கின்றன. பிரசவத்திற்கு பிறகு பெண்களின் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த பிரசவ எடையை குறைக்க பெண்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் எடையை குறைப்பது என்பது கடினமாக இருக்கும்.
தாய்ப்பால் கொடுப்பது
பெண்கள் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினாலே அவர்களின் உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே பெண்கள் தாய்ப்பாலூட்டுதல் மூலம் அவர்களின் உடல் அமைப்பை மீட்டெடுக்க முடியும் என்கிறது ஆராய்ச்சி. குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதால் ஒரு நாளைக்கு நிறைய கலோரிகள் வரை எரிக்க முடியும். ஆராய்ச்சி படி தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 500 கலோரிகள் வரை எரிக்க முடியும்.
எப்படி எடை இழக்க பயன்படுகிறது?
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுதல் மூலம் ஒரு நாளைக்கு ஒரு சிறிய சிற்றுண்டி அளவிற்கான கலோரிகளை (500 கலோரிகள்) நம்மால் எரிக்க முடியும். அதே நேரத்தில் தாய்ப்பால் ஊட்டுதல் உங்க குழந்தைக்கு போஷாக்கையும் நோயெதிர்ப்பு சக்தியையும் வழங்குவதோடு உங்களுடைய உடல் எடையை குறைக்கவும். அறிவியலின் படி உங்க உடலில் தேங்கியுள்ள உள்ள கொழுப்புச் செல்கள் பால் உற்பத்தியை ஊக்குவிக்க பயன்படுத்தப்பட்டு விடுகிறது.
ஊட்டச்சத்துக்கள்
அதே நேரத்தில் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் தங்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்தல், ஒல்லியான புரதம், நார்ச்சத்து நிறைந்த உணவுகளான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் 3 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்டினால் கிட்டத்தட்ட 3.2 பவுண்ட் (1.5 கிலோ கிராம்) வரை எடையை குறைக்க முடியும்.
தாய்ப்பால் கொடுப்பது பசியை அதிகரிக்கும்
தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்ப்பால் உற்பத்திக்காக உங்கள் உடலில் உள்ள அனைத்து ஆற்றல்களும் உள்ளன. இதனால் உங்க கலோரிகள் எரிக்கப்பட்டு உங்களுக்கு அடிக்கடி பசி உணர்வு ஏற்படுகிறது.