ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேரைகைது செய்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
16 பெண்களும் 26 ஆண்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று பிரமாண்ட போராட்டத்தை நடத்தின. 4 இடங்களில் இருந்து வாகன பேரணியாக கொழும்பிற்குள் நுழைந்தனர்.
கடவத்தை, கொட்டாவ, மொரட்டுவ மற்றும் வெலிசர ஆகிய இடங்களில் இருந்து ஆரம்பித்த வாகன பேரணிகள் ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்தன.
அடங்குவதாக போலீசார் தெரிவித்தனர்.
“நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிர்ப்பு நடவடிக்கையை தவிர்ப்பதற்காக இரண்டு போலீஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டன. எனினும், போராட்டக்காரர்கள், பொலிசாரின் ஆலோசனையை மதிக்காமல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மேலும் போலீஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டு போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்“ என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோ1ன கூறினார்.
பத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள 42 நபர்களிடம் இருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளை உள்ளிட்ட முக்கிய சாலையில் தடைகள், சட்டவிரோத கூட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் மீது தேசிய நெடுஞ்சாலை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி இந்த போராட்டம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.