‘அண்ணாத்த’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. கிராம பின்னணிக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றன.
படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையொட்டி ‘அண்ணாத்த’ திரைப்படத்தை வெளியிடும் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து, படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதி, இயக்குனர் சிவாவின் பிறந்தநாளன்று வெளியிடப்பட உள்ளக உள்ளடக்கம். இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.