கண்களைப் பாதுகாக்க அடிப்படை வழி இதோ!!

Date:

வரும் முன் காத்து, கண்களை பாதுகாப்போம்!

படிப்பதற்கும், எழுதுவதற்கும் கண்பார்வை தான் அடிப்படை. கண்பார்வை நன்றாக இருந்தால் தான் குழந்தைகளின் மன வளர்ச்சி நன்றாக இருக்கும். தற்போது குழந்தைகள் அதிக அளவில் மொபைல் போன், கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் குழந்தைகளின் கண்கள் மற்றும் மன நிலையில் கூட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் கவனமுள்ள பெற்றோர்கள் நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டிய மாற்றம் தென்பட்டால் டாக்டரின் ஆலோசனை பெறுவது அவசியம் ஆகும்.

ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை மேற்கொண்டால் எல்லா வகையான கண் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

40 வயதுக்கு மேல் அனைவரும் ஒரு வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக கண்களை பரிசோதிக்க வேண்டும். அதே சமயம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை பிரச்சினை இருக்கிறதா என பரிசோதித்து கொள்ள வேண்டும். ஆரம்ப கால சிகிச்சை மேற்கொண்டால் பார்வை இழப்பில் இருந்து கண்களை பாதுகாக்கலாம்.

கண் மருத்துவரால் மட்டுமே கண்டறியப்படும் கண்ணீர் அழுத்த நோய் என்பது கண் பார்வையை சத்தம் இல்லாமல் குறைக்கும் நோய் ஆகும். எனவே குளுக்கோமா நோய் இருந்தால் நமக்கு அறிகுறிகள் தென்படாது. அதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் பார்வை இழப்பில் இருந்து கண்களை பாதுகாக்கலாம்.

வயது முதிர்வால் ஏற்படும் கண்புரை பொதுவாக அதிக அளவில் கண்ணில் உள்விழிலென்ஸ் பொருத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்தபின் உள்ள நல்ல பார்வைக்கு கண் நரம்பு எனப்படும் (விழித்திரை) விழித்திரை முக்கிய பங்கு வகிக்கிறது. விழித்திரை நன்றாக இருந்தால் நல்ல பார்வை கிடைக்கும்.

கண்புரை அறுவை சிகிச்சை செய்து உள்விழி லென்ஸ் பொறுத்திய பின் சில வருடங்கள் கழித்து பார்வை மங்கலாக தெரிந்தால், உடனே கண் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது அவசியம் ஆகும்.

கண் மருத்துவத்தை பொருத்தவரை ஆரம்ப கால கண் பரிசோதனையை கண்களை பாதுகாக்க ஒரே வழி ஆகும்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்