24.5 C
Jaffna
March 9, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

ஒரு நாளைக்கு எவ்வளவு நெய் பயன்படுத்த வேண்டும்….குழந்தைகளுக்கு எவ்வளவு நெய் கொடுக்கலாம்….

நெய்யில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நெய் நம் ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மைகளை தந்தாலும் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள். எனவே எந்த அளவு நெய்யை உணவில் சேர்க்க வேண்டும், குறிப்பாக குழந்தைகளுக்கு எவ்வளவு நெய் கொடுக்கலாம் என அறிந்து கொள்வோம். சமையலைப் பொருத்தவரை நெய் என்பது மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. பருப்பு, சாதம், வெண் பொங்கல் மற்றும் பொங்கல் என எந்த சமையலாக இருந்தாலும் அதில் மணக்க மணக்க நெய் சேர்த்து சமைப்பது வழக்கமாக உள்ளது. உண்மையில் சுத்தமான நெய்யை உணவில் சேர்த்துக் கொண்டு வருவது நமக்கு மிகுந்த நன்மையை அளிக்கிறது.

​நன்மைகள்

நெய் சாப்பிடுவதால் ஜீரண உறுப்புகள் நன்றாக செயற்படும். இது ஒரு மலமிளக்கியாக செயல்படுகிறது. திசுக்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஆனால் அதே நேரத்தில் நீங்கள் அளவுக்கு அதிகமாக நெய் சேர்த்தால் சில பக்க விளைவுகளும் உண்டாக வாய்ப்புள்ளது. அதிகமாக நெய் உட்கொண்டால் வயிற்று போக்கு, தமனிகள் இரத்தக் குழாய்களில் கொழுப்பு சேர்வது மற்றும் வளர்ச்சிதை மாற்றக் குறைவை ஏற்படுத்தலாம். எனவே அளவுக்கு மீறி நெய் சாப்பிடுவது நல்லது அல்ல. எனவே ஒரு நாளைக்கு எவ்வளவு நெய் சாப்பிடலாம் என நிபுணர்கள் எடுத்துக் கூறுகின்றனர். அதைப் பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

நெய் எடுத்துக்கொள்ளும் அளவு :

நெய்யின் அளவு என்பது அது உணவின் அளவு மற்றும் உணவு வகைகளைப் பொறுத்தது. நீங்கள் சிறு தானிய உணவுகளை சாப்பிடுகிறீர்கள் என்றால் தாராளமாக நெய் சேருங்கள். இதுவே அரிசி சாதம் மற்றும் பருப்பு என்றால் சிறிய அளவில் நெய் சேர்த்து கொள்ளுங்கள். அதே போல் குழந்தைகளுக்கு நெய் கொடுப்பதாக இருந்தால் அவர்கள் திடப் பொருளை சாப்பிட ஆரம்பித்ததும் சேருங்கள். உதாரணமாக ஏழு மாதக் குழந்தைக்கு ஒரு கிண்ண உணவில் 4-5 தேக்கரண்டி நெய் சேர்த்து வரலாம். இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒரு நாளைக்கு 1-2 டேபிள் ஸ்பூன் நெய் அளவு போதுமானது என்கிறார்கள் நிபுணர்கள். அதே நேரத்தில் நெய்யை அதிக நேரம் சூடுபடுத்தக் கூடாது. அதிக நேரம் சூடுபடுத்தும் போது அதிலுள்ள கொழுப்புகள் ஆக்சிடோசினாக வாய்ப்பு உள்ளது. இது உங்க கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து இதய நோய் அபாயத்தை ஏற்படுத்தும். 15-20 நிமிடங்கள் சூடுபடுத்துவது போதுமானது.

​நெய்யின் ஊட்டச்சத்து அளவுகள் :

நெய்யும் வெண்ணெய்யும் கிட்டத்தட்ட ஒரே அளவு விட்டமின் மற்றும் தாதுக்களை கொண்டுள்ளன. நெய்யில் அதிகளவு விட்டமின் ஏ, ஈ மற்றும் டி போன்ற சத்துக்கள் உள்ளன. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இணைந்த லினோலிக் அமிலம் மற்றும் பியூட்ரிக் அமிலங்கள் உள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சமையல் குறிப்புக்கள் – கோவா வடை

Pagetamil

திருகோணமலை ஸ்பெஷல் மாமைற் முறுக்கு

Pagetamil

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

Pagetamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!