29.8 C
Jaffna
March 29, 2024
விமர்சனம்

இயக்குநர்களே, தாய்மையை ஓவர் ரொமான்டிசைஸ் செய்வதை எப்போது நிறுத்துவீர்கள்?

நெட்ஃபிளிக்ஸில் வெளியிடப்பட்டிருக்கும் ‘மிமி’ திரைப்படம் குறித்து அதிகப்படியான விவாதங்களை சமூக வலைதளங்களில் பார்க்கமுடிக்கிறது. மிமி கதாபாத்திரத்தில் கிரித்தி சனோன் சிறப்பாகவே நடித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து வரும் சம்மர் மற்றும் அவரது கணவர் ஜான் இருவரும் இந்தியாவில் ஒரு வாடகைத் தாயைத் தேடிவந்து கார் டிரைவர் பானுபிரதாப்பை (பங்கஜ் திரிபாதி) சந்தித்து அவர் ஆள் தேடி அலைவதில் படம் நகைச்சுவையாகத் தொடங்குகிறது. ராஜஸ்தானின் ஒரு சிறு நகரத்தில் பாலிவுட் நடிகையாகும் கனவுடன் டான்ஸராக இருக்கிறாள் மிமி. பாலிவுட் நடிகையாவதற்காக அவளது பணத்தேவையை பயன்படுத்தி பிரதாப் அவளிடம் 20 லட்ச ரூபாய் கிடைக்கும் எனக்கூறி வாடகைத் தாயாக சம்மதிக்க வைக்கிறார். மிமி கர்ப்பமாகிறாள். அவள் ஒன்பது மாதங்கள் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்வதைச் சொல்லி வீட்டில் போராடி அனுமதி வாங்கி உள்ளூரிலேயே தன் தோழியின் வீட்டில் தங்குகிறாள். கர்ப்ப காலம் முழுவதும் விரைவில் தனக்கு கிடைக்கும் பணமும் அதனால் தான் பாலிவுட்டில் கதாநாயகி ஆகிவிடுவோம் என்ற கனவும் மட்டுமே அவள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. அவள் குழந்தையைப் பற்றி எந்த உணர்வும் இல்லாமல் கர்ப்பத்தை ஒரு ப்ராஜெக்டை போல கையாள்கிறாள்.

சில வாரங்களுக்குப் பிறகு ஸ்கேனில் குழந்தை டவுன் நோய்க்குறி நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது. மருத்துவர் சொன்னதும் மிமி வயிற்றில் இருக்கும் கருவை ஏற்க மறுத்து சம்மரும், ஜானும் அமெரிக்கா சென்றுவிடுகிறார்கள். மிமி உடைந்து போகிறாள். தோழியின் வீட்டிலிருந்து தனது வீட்டுக்கு திரும்பிச் செல்கிறாள். ஆரம்பத்தில் கோபப்பட்டாலும் அவளது பெற்றோர்கள் அவளை ஏற்றுக் கொள்கிறார்கள். மிமி மருத்துவரிடம் குழந்தையை பெற்று வளர்க்கப் போவதாக சொன்னாலும் வீட்டில் வந்து தனது கனவை எண்ணி வருந்தி அழுகிறாள்.

படத்தில் குறிப்பிட்டு பாராட்ட வேண்டிய விஷயம் மனிதர்களிடையே இருக்கும் அன்பு. கர்ப்பமாகி வீட்டுக்குத் திரும்பி வரும் மிமியிடம் அழுது புலம்பும் தாயை மிமியின் பாட்டி, “நடந்தது போகட்டும், கடந்த காலத்தை விடுங்க … இப்ப பொண்ணு மாசமா இருக்கிறா … அவளைப் பார்த்துக்க வேண்டியது நம்ம பொறுப்பு பார்த்துக்கலாம்” என்று அனுசரணையாக பேசி மிமியை அழைத்துச் சென்று உணவு கொடுக்கிறாள். அவரது மும்பை கனவு வீணாகிவிட்டது என்று அழுது புலம்பும் மிமியிடம், ”நீ சினிமாவில் நடிப்பு … உன் குழந்தையை நான் பார்த்துக்கிறேன்” என்று ஆறுதல் சொல்கிறாள் தோழி ஷாமா. படத்தில் எல்லா பெண்களும் ஒருவருக்கொருவர் அன்பாக இணக்கமாக இருக்கிறார்கள்.

மிமி ஹோட்டலில் நடனமாடுவது, பாலிவுட் நடிகையாக ஆசைப்படுவது, திடீரென கர்ப்பமாக வந்து நிற்பது, தகப்பன் இல்லாத குழந்தையை வளர்ப்பது என எல்லாவற்றிலும் முதலில் ஊராரை நினைத்து அழுது திட்டினாலும் ஊரா, மகளா என வரும்போது மகளுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.

படத்தில், ”இந்த உலகத்தில் அம்மா – குழந்தை உறவுக்கு ஈடாக வேறு எதுவும் இல்லை” என்று கார் டிரைவர் சொல்வார். கர்ப்பமாக இருக்கும் மிமியை பார்த்து, “இப்பதான் முன் எப்போதையும் விட அழகாக இருக்கிறாய்” என்று சம்மர் கூறுவாள். “டவுன் சிண்ட்ரோம் ஆல் பாதிக்கப்பட்ட கருவை பலரும் கலைத்து விடுவார்கள்” என்று மருத்துவர் சொல்லும்போது, ​​”ஒரு குழந்தையை கொல்வது எப்படி தவறானது அதேபோல் கருவை கலைப்பதும் தவறுதான்” என்பாள் மிமி.

குழந்தை பிறந்த மறுநாள் மிமியிடம் அவள் தோழி ஷாமா, ”வாழ்வில் எது நடந்தாலும் நாம் அதைக் கடந்து முன் நகர வேண்டும். நீ இப்போது என்ன முடிவு செய்து இருக்கிறாய்? ” என்று கேட்பாள். அதற்கு, “இவனுக்கு இப்போது டயப்பர் மாற்ற வேண்டும்” என்று சிரிப்பாள் மிமி. கனவுகளைப் பற்றி அக்கறையாக பேசும் தோழியிடம் லட்சியத்தை விட குழந்தைதான் முக்கியம் எனக் குழந்தை பிறந்த மறுநாளே மிமி உணர்ந்து பேசுவதாக அக்காட்சி இருக்கும்.

க்ளைமாக்ஸில் படத்தின் முடிவைச் சரிபார்த்து இப்படி படம் முழுக்க தாய்மை மற்றும் கர்ப்பத்தை ஓவர் ரொமான்டிசைஸ் செய்துள்ளார் இயக்குநர். இருபது வாரங்களுக்குள் இருக்கும் கருவை கலைக்க இந்தியாவில் நிபந்தனையுடன் சட்டப்படி அனுமதி உண்டு. அதேபோல் 24, 26 வாரங்கள் ஆன கருவை கூட கலைப்பதற்கு முறையான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தை அணுகி கலைக்கு வழிவகை செய்யலாம். இச்சூழலில் பெண்களின் உடல்நலம் மற்றும் வாழ்வில் அக்கறையில்லாத பயன்பாட்டு சென்டிமென்டால் கருத்துகள் மீண்டும் தாய்மையின் பேரால் பெண்களை முடக்க வழி செய்யும்.

உடல் மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடு (டவுன் சிண்ட்ரோம்) பின்னாட்களில் ஏற்படலாம் எனக் கண்டறியப்படுவதற்கான ஸ்கேன் 10 முதல் 13 வார கர்ப்பத்தில் செய்யப்படுகிறது. அவ்வாறு குறைபாடுள்ள குழந்தைகள் பிறந்து பிறகு அதை சிறப்பு கவனிப்புடன் வளர்க்க மன உறுதியும், வசதி வாய்ப்பும் இல்லாதவர்கள் கருவை கலைக்க முடிவெடுக்கிறார்கள். பதினெட்டு வயது நிரம்பிய பெண் தனது கருவை (20 வாரங்களுக்கு உட்பட்ட) கலைக்க உரிமை உள்ளது என கர்ப்ப கால மருத்துவச் சட்டம், 1971 சொல்கிறது.

‘கருவை கலைப்பது கொலை செய்வதற்கு சமம்’ என்று மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் தேவையில்லாத அல்லது தங்களுக்கு விருப்பமில்லாமல் ஏற்பட்ட கர்ப்பத்தை கலைக்கும் பெண்களுக்கு குற்ற உணர்ச்சியையும் அதன்மூலம் முடிவெடுப்பதில் குழப்பத்தையும் திரைப்படங்களையும் ஏற்படுத்துகின்றன.

குழந்தையை சுமக்க முடியாத நிலையில் கர்பப்பை இருக்கும் பெண்கள் வாடகைத்தாயின் (வாடகைத் தாய்) மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இந்த முறையில் கணவன் மனைவியின் விந்தணு மற்றும் கருமுட்டையைக் கொண்டு டெஸ்ட் டியூப்பில் கரு உண்டாக்கி அதை IVF முறையில் வாடகைத் தாயின் கருப்பையில் வைத்து வளர்த்து குழந்தை பெறச் செய்கிறார்கள்.

இந்தியாவில் வசதி படைத்தவர்களும், வெளிநாட்டிலிருந்து வருபவர்களுமே அதிகம் இம்முறையில் குழைந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இது மிகப்பெரிய வணிகமாக மாறிய சூழ்நிலையில் அதை முறைப்படுத்திய இந்திய அரசு வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டத்தை 2019-ல் கொண்டு வந்தது. அதன்படி திரைப்படத்தில் காட்டியிருப்பதை போன்று வெளிநாட்டினர் ஒருவர் யாரோ ஒருவரை தேர்ந்தெடுத்து குழந்தை பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை.

வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை உருவாக்கி சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபடுதல், வெளிநாட்டில் இருந்து வாடகைத்தாயை தேடி வருபவர்கள் மற்றும் வாடகைத் தாயாகும் பெண்கள் கைவிடப்படுதல், பதினெட்டு வயதுக்கு குறைவான சிறுமிகள் வாடகைத் தாயாவது, ஒரே பெண் பணத்திற்காக பலமுறை குழந்தை பெற்றுக் கொள்வது போன்றவற்றைத் தடுக்க வேண்டும். இச்சட்டத்தின்படி திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆன தம்பதிகள், வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெறலாம். குழந்தை பெற்றுத்தரும் வாடகைத் தாய் அத்தம்பதியின் ரத்த சொந்தமாக இருக்க வேண்டும். குழந்தை பெறும் மருத்துவ செலவுகள் தவிர வேறு பணம் பெறக்கூடாது. வாடகைத் தாயாக இருப்பவர், ஏற்கெனவே ஒரு குழந்தையாவது பெற்றவராக இருக்க வேண்டும். வாடகைத் தாயின் வயது 25-30 வரை மட்டுமே இருக்க வேண்டும்.

வாடகைத் தாய் ரத்த சம்பந்தமாக இருக்க வேண்டும் என்பது சாதி, மதத்தை மனதில் வைத்து அரசு சட்டம் உருவாக்கி இருக்கிறதா என்கிற கேள்வியும் உள்ளது. இவ்வாறு உறவினரே வாடகைத் தாயாக பட்சத்தில் அந்த குழந்தையை அடிக்கடி பார்க்க நேரிடும் போது அது வாடகை தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ உணர்வு மற்றும் உறவு ரீதியான சிக்கல்களை பின்னாளில் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நான்கு ஆண்டுகள் தான் பெற்ற குழந்தையின் மீது ஒரு தாய்க்குறிய அன்புடன் வளர்க்கிறாள் மிமி. குழந்தையை கைவிட்டுவிட்டு ஓடிய வெளிநாட்டு தம்பதியினர் நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் அக்குழந்தையை தேடி வருகிறார்கள். அவர்களிடம் குழந்தையை தரமுடியாது என்று மிமி சண்டையிடுகிறாள். சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று அவர்கள் மிரட்டிச் சென்றதும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து மறுநாள் மிமி குழந்தையை ஒப்படைக்கிறாள். ஆனால் அச்சமயத்தில் அவர்கள் வேறு ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொண்டு மிமி பெற்றுக்கொண்ட குழந்தை அவளிடமே இருக்கட்டும் என்று சொல்லி விடுகிறார்கள்.

இந்தியாவில் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதை விட கடினமானது தற்போது குழந்தை தத்தெடுக்கும் முறை. இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் (CARA) வில் தகுந்த ஆவணங்களோடு பதிவு செய்து குழந்தைகளை தத்தெடுக்கும் முறை மட்டுமே சட்ட ரீதியானது. அதற்கு பல நிபந்தனைகள் உண்டு. பதிவு மூப்பின் அடிப்படையில் மட்டுமே குழந்தைகள் தத்து கொடுக்கப்படும் என்பதால் அவ்வாறு பதிவு செய்யும் தம்பதிகள் 2 – 4 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

‘கருவை கலைப்பது கொலை செய்வதற்கு சமம்’ என்று மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் தேவையில்லாத அல்லது தங்களுக்கு விருப்பமில்லாமல் ஏற்பட்ட கர்ப்பத்தை கலைக்கும் பெண்களுக்கு குற்ற உணர்ச்சியையும் அதன்மூலம் முடிவெடுப்பதில் குழப்பத்தையும் திரைப்படங்களையும் ஏற்படுத்துகின்றன.

குழந்தையை சுமக்க முடியாத நிலையில் கர்ப்பப்பை இருக்கும் பெண்கள் வாடகைத்தாயின் (வாடகை தாய்) மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இந்த முறையில் கணவன் மனைவியின் விந்தணு மற்றும் கருமுட்டையைக் கொண்டு டெஸ்ட் டியூப்பில் கரு உண்டாக்கி அதை IVF முறையில் வாடகைத் தாயின் கருப்பையில் வைத்து வளர்த்து குழந்தை பெறச் செய்கிறார்கள்.

இந்தியாவில் வசதி படைத்தவர்களும், வெளிநாட்டிலிருந்து வருபவர்களுமே அதிகம் இம்முறையில் குழைந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இது மிகப்பெரிய வணிகமாக மாறிய சூழ்நிலையில் அதை முறைப்படுத்திய இந்திய அரசு வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டத்தை 2019-ல் கொண்டு வந்தது. அதன்படி திரைப்படத்தில் காட்டியிருப்பதை போன்று வெளிநாட்டினர் ஒருவர் யாரோ ஒருவரை தேர்ந்தெடுத்து குழந்தை பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை.

வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை உருவாக்கி சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபடுதல், வெளிநாட்டில் இருந்து வாடகைத்தாயை தேடி வருபவர்கள் மற்றும் வாடகைத் தாயாகும் பெண்கள் கைவிடப்படுதல், பதினெட்டு வயதுக்கு குறைவான சிறுமிகள் வாடகைத் தாயாவது, ஒரே பெண் பணத்திற்காக பலமுறை குழந்தை பெற்றுக் கொள்வது போன்றவற்றைத் தடுக்க வேண்டும். இச்சட்டத்தின்படி திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆன தம்பதிகள், வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெறலாம்.

குழந்தை பெறுதரும் வாடகைத் தாய் அத்தம்பதியின் ரத்த சொந்தமாக இருக்க வேண்டும். குழந்தை பெறும் மருத்துவ செலவுகள் தவிர வேறு பணம் பெறக்கூடாது. வாடகைத் தாயாக இருப்பவர், ஏற்கெனவே ஒரு குழந்தையாவது பெற்றவராக இருக்க வேண்டும். வாடகைத் தாயின் வயது 25-30 வரை மட்டுமே இருக்க வேண்டும்.
வாடகைத் தாய் ரத்த சம்பந்தமாக இருக்க வேண்டும் என்பது சாதி, மதத்தை மனதில் வைத்து அரசு சட்டம் உருவாக்கி இருக்கிறதா என்கிற கேள்வியும் உள்ளது. இவ்வாறு உறவினரே வாடகைத் தாயாக பட்சத்தில் அந்த குழந்தையை அடிக்கடி பார்க்க நேரிடும் போது அது வாடகை தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ உணர்வு மற்றும் உறவு ரீதியான சிக்கல்களை பின்னாளில் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நான்கு ஆண்டுகள் தான் பெற்ற குழந்தையின் மீது ஒரு தாய்க்குறிய அன்புடன் வளர்க்கிறாள் மிமி. குழந்தையை கைவிட்டுவிட்டு ஓடிய வெளிநாட்டு தம்பதியினர் நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் அக்குழந்தையை தேடி வருகிறார்கள். அவர்களிடம் குழந்தையை தரமுடியாது என்று மிமி சண்டையிடுகிறாள். சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று அவர்கள் மிரட்டிச் சென்றதும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து மறுநாள் மிமி குழந்தையை ஒப்படைக்கிறாள். ஆனால் அச்சமயத்தில் அவர்கள் வேறு ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொண்டு மிமி பெற்றுக்கொண்ட குழந்தை அவளிடமே இருக்கட்டும் என்று சொல்லி விடுகிறார்கள்.

இந்தியாவில் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதை விட கடினமானது தற்போது குழந்தை தத்தெடுக்கும் முறை. இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் (CARA) வில் தகுந்த ஆவணங்களோடு பதிவு செய்து குழந்தைகளை தத்தெடுக்கும் முறை மட்டுமே சட்ட ரீதியானது. அதற்கு பல நிபந்தனைகள் உண்டு. பதிவு மூப்பின் அடிப்படையில் மட்டுமே குழந்தைகள் தத்து கொடுக்கப்படும் என்பதால் அவ்வாறு பதிவு செய்யும் தம்பதிகள் 2 – 4 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

ஆக, திரைப்படத்தில் காட்டியிருக்கும் வாடகைத் தாய் மற்றும் இன்ஸ்டன்ட் தத்தெடுக்கும் முறை இரண்டும் முறையே இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பானது மற்றும் சாத்தியமில்லாதது.
திருமணமாகாத இளம்பெண் வாடகைத்தாயாகி ஒருவருக்கு குழந்தை பெற்றுத்தர சம்மதிக்கிறாள். முழுக்க முழுக்க பணத்திற்காக மட்டுமே அவள் இதற்கு ஒத்துக் கொள்கிறாள். குழந்தைக்கு உரிமையானவர்கள் விட்டுவிட்டு ஓடிவிட்டதால் வேறு வழியின்றி அக்குழந்தையை வளர்க்க வேண்டிய பொறுப்புக்கு ஆளாகிறாள். ஒரு தற்செயலான தாய். அந்த குழந்தைக்கு உரிமையானவர்கள் வந்து கேட்கும்போது குழந்தையை கொடுத்துவிட்டு அவளது கனவினை நோக்கி பயணித்திருக்கலாம்.அல்லது குழந்தையை தன்னுடன் வைத்துக்கொண்டே கூட அவள் பாலிவுட் நடிகையானது அவனது ஆசையை நிறைவேற்றும் வழியை யோசித்திருக்கலாம். அதுதான் சிறுவயது முதல் அவளது கனவாக இருந்தது. அவளுடைய 25 வயதுவரை அதைப்பற்றி மட்டுமே சிந்தித்து, அதற்காக உழைத்து, திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும் பெற்றோர்களை சமாளித்து வந்திருக்கிறாள்.வாடகைத் தாயாக ஆனதன் பின்னால் இருந்த ஒரே காரணமும் அதுவே. கர்ப்பமாக இருந்த காலத்தில் கூட அவளது எண்ணம் முழுவதும் அவளது கனவுக்காக அதற்கான பணத்திலுமே இருக்கும். ஒருபோதும் அவள் வயிற்றில் இருந்த குழந்தையுடன் உணர்வுப்பூர்வமான உறவை நினைத்தவைகளில்லை. அப்படி இருந்த பெண், ஒரு குழந்தையைப் பெற்றதும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அந்த குழந்தையை வளர்ப்பது மட்டுமே வாழ்க்கை என்று மாறிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது பெண்ணடிமைத்தனம் அல்லவா?

நான்கு ஆண்டுகள் தனது கனவுகளைவிட்டுவிட்டு முழுக்க முழுக்க குழந்தைக்கு தாயாக மட்டுமே மிமி இருக்கிறாள். சௌகார் ஜானகி, லட்சுமி போன்றவர்கள் அக்காலத்திலேயே குழந்தை பெற்றுக்கொண்ட பின்னும் கதாநாயகியாக நடித்தவர்கள். எல்லாத்துறைகளிலும் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் வேலை செய்கிறார்கள், சாதிக்கிறார்கள்.

பண்பாட்டின் பேரில், தாய்மையின் பேரில்படம் முழுவதும் சொல்லி தாய்மையை புனிதப்படுத்தி பெண்களை குழந்தை பெற்று வளர்ப்பதில் முடக்குவதே ஆகும். இன்னமும் வழக்கை பெண்ணடிமைத்தனங்களை தாய்மையின் பெயரால் பெண்கள் மேல் திணிக்கும் படங்கள் கொண்டாடப்படுகிறது என்பது வருத்தத்துக்குரியது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜகமே தந்திரம்-விமர்சனம்

divya divya

மலேஷியா டூ அம்னீஷியா-விமர்சனம்

divya divya

அண்ணன், தங்கை பாசத்தின் ‘ஐகான்…’ ‘பாசமலர்’ வெளியாகி 60 ஆண்டுகள்!

divya divya

சக மக்களை வெறுக்க முடியுமா?- ஆஸ்கர் வென்ற ஜோஜோ ராபிட் படம் தரும் தெளிவு!

divya divya

குக்கூ பாடலுக்கு புது வடிவம் கொடுத்த யாழ் இளைஞர்கள்!!

Pagetamil

Leave a Comment