நகைச்சுவை நடிகரின் வீட்டில் ஒரு கலெக்டர்!!!

Date:

பிரபல நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியராக பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார். இது குறித்து அறிந்த சினிமா ரசிகர்கள் சின்னி ஜெயந்தை பாராட்டுகிறார்கள்.

80கள், 90களில் தமிழ் திரையுலகின் பிசியான நகைச்சுவை நடிகராக இருந்தவர் சின்னி ஜெயந்த். இவர் “ஹா” என்று ஸ்டைலில் சொல்வதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
சின்னி ஜெயந்துக்கு ஸ்ருதன் ஜெய் நாராயணன் என்ற மகன் இருக்கிறார். தன் மகனை தன்னை போன்றே நடிகராக்க வேண்டும் என்று சின்னி ஜெயந்த் நினைக்கவில்லை. மாறாக ஸ்ருதன் தன் இஷ்டப்படி கெரியரை தேர்வு செய்யட்டும் என்று விட்டுவிட்டார் சின்னி ஜெயந்த்.
படிப்பில் கெட்டிக்காரரான ஸ்ருதன்(26) கடந்த 2019ம் ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அதில் 75வது ரேங்க் வாங்கியிருந்தார்.
ஐ.ஏ.எஸ் பிரிவை தேர்வு செய்த ஸ்ருதன் தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியராக பயிற்சி பெற்று வருகிறார். அவர் கடந்த 3 மாதங்களாக பயிற்சி பெற்று கொண்டிருக்கிறார்.
ஸ்ருதன் உதவி ஆட்சியராக பயிற்சி பெறுவது குறித்து அறிந்த சமூக வலைதளவாசிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் சின்னி ஜெயந்துக்கு இதை விட பெருமை வேறு என்ன இருக்க முடியும் என்று கூறி அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
முன்னதாக மகன் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் அதை ரஜினிக்கு போன் செய்து தெரிவித்தார் சின்னி ஜெயந்த். ரஜினி ஸ்ருதனை மனதார பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

spot_imgspot_img

More like this
Related

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...

கமலின் அடுத்த படம் ‘சண்டியர்’

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு...

பொலிஸ்மா அதிபரின் முறைப்பாடு: கம்பஹா நீதவானுக்கு இடமாற்றம்

கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்