24.6 C
Jaffna
March 7, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

கறிவேப்பிலையை நீண்ட நாட்கள் சேமித்து வைப்பது எப்படி….

 

கரிவேப்பிலை அதிக அளவில் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. தோசையில் துவங்கி இறைச்சி வரை பல உணவுகளில் கறிவேப்பிலை சேர்க்கப்படுகிறது. எதற்காக மக்கள் கறிவேப்பிலையை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்வி பலருக்கு இருக்கலாம். காரணமாக கரிவேப்பிலை அற்புதமான நன்மைகளை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே சமையல் அறைகளில் கரிவேப்பிலை தனி இடத்தை பிடித்துள்ளது.

கறிவேப்பிலையின் நன்மைகள்

கறிவேப்பிலையில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், ஆண்டி பாக்டீரியல் பண்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைவு காணப்படுகின்றன. மேலும் செரிமானத்தை மேம்படுத்துதல் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் இதன் பொதுவான ஆரோக்கிய நன்மைகளாக உள்ளன.

வாடாமல் வைத்திருக்க
கறிவேப்பிலையை உண்பது நமக்கு நன்மையளிக்கலாம். நாம் தினசரி கறிவேப்பிலையை நமது உணவுகளின் மூலம் சேர்த்துக்கொள்ளலாம். உங்களிடம் ஒரு கறிவேப்பிலை செடி இருந்தால் அதிலிருந்து கறிவேப்பிலையை எடுத்து எப்படி எளிமையாக பாதுகாப்பது என நீங்கள் யோசிக்கலாம். அதற்கான சில வழிகளை இப்போது பார்ப்போம்.

கறிவேப்பிலையை சேமிக்க சிறந்த வழி கறிவேப்பிலை செடியில் இருந்து இலைகளை அகற்றி நன்றாக கழுவவும். பிறகு அந்த இலைகளை வடிகட்டியில் வைக்கவும். இப்போது அதில் இருந்த தண்ணீர் முழுவதும் வடிந்துவிடும். பிறகு அந்த இலைகளை மின் விசிறியின் கீழ் வைக்க வேண்டும். பிறகு 2 முதல் 3 மணிநேரம் வரை இந்த இலைகளை உலர வைக்கவும். பிறகு மீண்டும் துணியில் இட்டு நீர் போக அதை உலர வைக்கவும். அதன் பின்பு காற்று புகாத கொள்கையில் கறிவேப்பிலையை வைத்து அதை மூடி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

துணியில் போற்றி வையுங்கள் கறிவேப்பிலையை
ஈர்க்குகளோடு பறித்து உடனே அதை ஒரு துணியில் போர்த்தி வைக்கவும். அனைத்து இலைகளும் சரியாக மூடப்பட்டிருக்கிறதா அல்லது அவை நிறம் மாறுகிறதா என்பதைப் பார்க்கவும். இது குறைந்தபட்சம் 10 முதல் 12 நாட்கள் வரை கறிவேப்பிலையை வைத்து உதவும் முறையும்.

ஃபிரிட்ஜில் கரிவேப்பிலையை
கொள்கலனில் வைத்து குளிர்சாதன பெட்டியில் வைப்பது அதை மேலும் நீண்ட நாட்கள் வைத்திருப்பதற்கு பயன்படுகிறது. தேவைப்படும்போது மட்டும் இந்த இலைகளை எடுத்து பயன்படுத்தவும்.

சிப்-லாக் கவர் சில
இலைகளை வெட்டி சிப் லாக் கொண்ட பைகளில் வைப்பதுண்டு. அந்த பையானது கறிவேப்பிலையில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடுகிறது. ஆனால் அடிக்கடி பையை திறந்து வைக்க வேண்டும்.

ஈரப்பதமில்லாமல்
புதினா மற்றும் கொத்தமல்லி போன்ற இலைகளையும் சேமிக்க இந்த எளிய வழிகளை பின்பற்றலாம். ஏனெனில் இந்த இலைகள் அனைத்தும் ஈரப்பதம் இல்லாமல் சேமித்து வைப்பது மிக முக்கியமானதாகும். இல்லையெனில் இவை நீண்ட காலத்திற்கு இருக்காது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சமையல் குறிப்புக்கள் – கோவா வடை

Pagetamil

திருகோணமலை ஸ்பெஷல் மாமைற் முறுக்கு

Pagetamil

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

Pagetamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!