2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தனிநபர் குதிரையேற்ற போட்டியில் இருந்து இலங்கையின் மாடில்டா கார்ல்சன் வெளியேற்றப்பட்டார்.
டோக்கியோவில் உள்ள ஈக்வெஸ்ட்ரியன் பூங்காவில் நடைபெறும் இந்த போட்டியில், கார்ல்சனால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.
73 போட்டியாளர்களில் 30 பேர் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.
2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இலங்கையரான கார்ல்சனின் வெளியேற்றத்துடன், இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் பதக்கத்துக்கான இலங்கையின் எதிர்பார்ப்புக்களையும் முடித்து வைக்கிறது.
மொத்தம் ஒன்பது இலங்கையர்கள் டோக்கியோ 2020 இல் போட்டியிட்டனர். ஆனால் எந்த வீரரும் குறிப்பிடத்தக்க சாதனை அல்லது அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1