கிளிநொச்சியில் ஆசிரியர்கள் 6ஆம் திகதி போராட்டம்!

Date:

கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள சில பாடசாலைகளில் கடமையில் இருக்கின்ற அதிபர்கள்  தமது ஆசிரியர்கள் மீது அராஜகங்கள் புரிந்து வருவதாக ஆசிரிய  சேவை சங்கத்தின் பிரதிநிதிகள்  தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் ஆசிரியர் தொழிற்சங்கம் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கிளிநொச்சியில் எதிர்வரும் 6ஆம் திகதி போராட்டம் ஒன்றை முன்னெடுக்க இருப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது, கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள சில பாடசாலைகளில் கடமையில் இருக்கின்ற அதிபர்கள்  தமதுஆசிரியர்கள் மீது அராஜகங்கள்புரிந்து வருகின்றனர் என்றும்,   நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாகவும், அனைத்து ஆசிரியர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்கா மீது நம்பிக்கையில்லை: ஈரான் வெளிவிவகார அமைச்சர்

போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தெஹ்ரானுக்கு...

ஓகஸ்ட் மாதம் வரையான எரிபொருள் கையிருப்பு உள்ளது!

ஓகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த...

விஜய் அரசின் குதிரை பேரம்: பிரேமலதா கிடுக்குப்பிடி

முகத்தை மூடிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்ததவர் யார்? என்பதை முதல்வர் விஜய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்