24.9 C
Jaffna
January 20, 2025
Pagetamil
உலகம்

வூஹானில் மீண்டும் கொரோனா: 1 கோடிக்கும் அதிகமானவர்களிற்கு பரிசோதனை!

கொரோனா வைரஸ் பரவல் முதலில் ஏற்பட்ட வூஹான் மாகாணத்தில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கி இருப்பதால் அங்குள்ள மொத்த குடியிருப்புவாசிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

சீனாவின் வூஹான் உட்பட பல மாகாணங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளில் சீன அரசு இறங்கி உள்ளது.

அந்த வகையில் வூஹானில் உள்ள மொத்த குடியிருப்புவாசிகளுக்கும் (அதாவது 1.1 கோடி மக்களுக்கு) கொரோனா பரிசோதனைகளை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவி, கடந்த 2 ஆண்டுகளாக அடுத்தடுத்து கொரோனா அலைகள் உருவாகி கொண்டிருக்கின்றன.

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அந்த நாட்டு அரசு கூறிவந்த நிலையில் ஜியாங்சூ, செச்சுவான், லியானிங், ஹூனான், ஹூபெய் உள்ளிட்ட 5 மாகாணங்களில் தற்போது கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது.இந்த மாகாணங்களில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

2025ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருது விழா ரத்தாகுமா?

east tamil

கவிழ்ந்த கொள்கலனில் பெற்றோல் எடுத்த 70 பேர் எரிந்து பலி

Pagetamil

காஸா எல்லையில் இன்று போர் நிறுத்தம்

east tamil

படகு கவிழ்ந்து 40 பாகிஸ்தானியர்கள் பலி

east tamil

Leave a Comment